You are here

இந்தியா

நடிகர் அருண் விஜய் தலைமறைவு ஆகவில்லை: காவல்துறை விளக்கம்

தூக்கிச் செல்லப்படும் அருண் விஜயின் கார்.

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் அருண் விஜய் போலிஸ் காவலில் இருந்து தப்பியோடியதாக வெளியான தகவலை காவல்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய அருண் விஜய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றார். கடந்த 26ஆம் தேதி இரவு மதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் அருண் விஜய், காவல்துறை வாகனம் மீது மோதியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸ் காவலில் இருந்தபோது அவர் தப்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.

அதிமுகவின் அராஜகப் போக்கை மக்கள் கவனிக்கின்றனர் - திமுக எம்எல்ஏ சந்திரசேகர்

திமுக எம்எல்ஏ சந்திரசேகர்

சென்னை: அதிமுகவின் அராஜகப் போக்கை மக்கள் கவனித்து வரு வதாக திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் கூறினார். சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், திரைப் பட நடிகர்களையும் மிஞ்சும் அள வுக்கு அதிமுக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் நடித்துக் கொண்டிருப்பதாக விமர் சித்தார்.

முன்கூட்டியே வாக்காளர்களை ‘கவனிக்கும்’ அதிமுக புள்ளி

சேலம்: நகராட்சித் துணைத் தலைவர் தனது வார்டுக்கு உட்பட்ட வீடுகளுக்குத் தலா அரைகிலோ ஆட்டுக் கறியும் கோழியும் கொடுத்தது ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன் என்ற அந்நபர் அதிமுக நகரச் செயலராக வும் பொறுப்பு வகிக்கிறார். தம்மை நகராட்சி கவுன்சி லராக தேர்வு செய்த வார்டு மக்களுக்கு நன்றி தெரிவிக் கவே அவர் இவ்வாறு செய்ததாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்ப தால், வார்டு மக்களை கவர மோகன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப் பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். கடந்த உள் ளாட்சித் தேர்தலில் ஆத் தூரில் 21ஆவது வார்டில் போட்டியிட்டு வென்றார் மோகன்.

முடிவுக்கு வந்தது சட்டப்பேரவை தடை

சென்னை: சட்டப்பேரவை நடவடிக் கைகளில் பங்கேற்க திமுக உறுப் பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒருவார கால தடை நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதைய டுத்து இன்று பேரவைக் கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழக மின் வாரியத்தின் செயல்பாடுகளை திமுக தலைவர் கருணாநிதி கடு மையாக விமர்சித்து இருப்பதால், இன்றைய தினம் சட்டப்பேரவையில் திமுகவினர் அதுகுறித்து விவா தங்களை எழுப்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குட்டைப் பாவாடை அணிய வேண்டாம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய அமைச்சர் அறிவுரை

இந்தியாவுக்குச் சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணியாமல் இருப்பது அவர்களுக்குப் பாதுகாப்பானது என்று கூறி, சர்ச்சையில் சிக்கியுள்ளார் இந்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. ஆக்ராவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய திரு சர்மா, “இந்திய கலாசாரம், மேற்கத்திய கலாசாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆகையால், இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி குட்டையான ஆடைகளையோ அல்லது உடல் அங்கங்கள் தெரியும்படியான ஆடைகளையோ அணிய வேண்டாம்,” என்று சொன்னார்.

பச்சமுத்து மகன் ரவி மீது நில அபகரிப்பு புகார்: கைதாக வாய்ப்பு

பச்சமுத்து. படம்: ஊடகம்

சென்னை: பண மோசடி குற்றச் சாட்டின் பேரில் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்து கைதான நிலையில், அவரது மகனும் கைதாகலாம் எனக் கூறப் படுகிறது. பச்சமுத்துவின் மகன் ரவி மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது. சென்னை, கோயம்பேடு பகுதி யில் உள்ள 8 ஏக்கர் நிலத்தை போலி பட்டா தயாரித்து, அவர் அபகரித்ததாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரத்தில் ரவி பச்சமுத்துவுக்கு கூலிப்படையினர் உதவி செய்ததாகவும் கூறப்படு கிறது. இதையடுத்து ரவியின் நில அபகரிப்பால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐந்து பேர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

பிச்சை எடுத்த சிறுவன்: லஞ்சம் கேட்ட அலுவலர் நீக்கம்

விழுப்புரம்: சமூக நலத்துறை வழங்கிய உதவித் தொகையை அளிக்க ரூ.3,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருந்து விடுவிக்கப் பட்டார். உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த மாணவன் அஜித்குமாரின் (15 வயது) தந்தை கொளஞ்சி அண்மையில் காலமானார். அவரது குடும்பத்துக்கு சமூக நலத்துறை 12,500 ரூபாயை உதவித் தொகையாக அளிக்க முன்வந்தது. எனினும் இத் தொகையைப் பெற கிராம நிர் வாக அலுவலரின் கையெழுத்து தேவைப்பட்டது.

தமிழகத்தின் கடன்சுமை: பழ.கருப்பையா கவலை

பழ.கருப்பையா.

தி.மலை: அதிமுக ஆட்சியில் தமி ழக அரசின் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா கூறினார். திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இத்த கைய நிலை நீடித்தால் மக்கள் நிலை மோசமாகும் என்றார். “சொத்துக் குவிப்பு வழக்கில் இருமுறை முதல்வர் பதவியை இழந்து சிறைக்குச் சென்றவர் ஜெயலலிதா. அவர் சிறைக்குச் சென்றபோது சென்னை ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்ட யாகத்தில் பங்கேற்று ‘மீண்டும் ஜெயலலிதா வெளியில் வரக் கூடாது’ என மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.

பேருந்துகளைக் களவாடி காசு பார்த்த இளையர் கைது

தனியாருக்குச் சொந்தமான பேருந்துகளைத் திருடி பணம் சம்பாதித்த இளையரை தமிழக போலிசார் கைது செய்தனர். கடலூரை ஒட்டியுள்ள கங்க னாங்குப்பம் பகுதியில் வேகமாக வந்த ஒரு தனியார் பேருந்து, மாட்டு வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்த போலிசார், அந்த வழியாக வேகமாக வந்த பேருந்துகளைச் சோதனை செய்தனர்.

ஒலிம்பிக் நாயகியின் நேர்த்திக் கடன்

கோயிலுக்கு பாவாடை தாவணியில் வந்த சிந்து. படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனை பி.வி. சிந்து நேற்று அதி காலை கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினார். ஹைதராபாத்தில் உள்ள சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு அவர் தனது குடும்பத்தினருடன் பாத யாத்தி ரையாக வந்து சேர்ந்தார். பாவாடை, தாவணி உடையணிந்திருந்த அவர், பயபக்தி யுடன் வேண்டுதல் பொருள்களைத் தலையில் சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். நேர்த்திக் கடன் நிறைவேற்றியது குறித்துப் பேசிய சிந்து, “இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் வருவேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் மீண்டும் வருவதாக வேண்டிக் கொண்டேன்.

Pages