You are here

இந்தியா

பொருளியல் வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா

புதுடெல்லி: 2017-18ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் நாட்டின் நடப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6%ல் இருந்து 7.7%ஆக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் சீனாவை வீழ்த்தி உலகின் மிகப்பெரிய பொருளியல் வளர்ச்சி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2017-18ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.6%ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாவது, மூன்றாவது காலாண்டில் முறையே 6.3%ஆகவும் 7.0% ஆகவும் இருந்தன. இப்போது, நான்காவது காலாண்டில் 7.7%ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மேலும்

குமாரசாமி: ஐந்து ஆண்டுகளுக்கு நானே கர்நாடகாவின் முதல்வர்

புதுடெல்லி: தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு நானே கர்நாடகா வின் முதல்வராக ஆட்சி புரிய உள்ளேன் என்று கர்நாடக முதல் வர் குமாரசாமி கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் முழுமனதுடன் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சியும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வரும் 2019 மக்களவை தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் படித்த, 35 வயதுக்கு மிகாமல் இருக்கும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர் களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கும் முயற்சியில் ஆந்திர அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஆந்திர மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஆந்திர அரசாங்கத்தால் ரூ.1,200 கோடி ஒதுக்கப்படவுள்ளது.

மழை நீரைக் கோயில் குளத்தில் சேர்க்க அரசாங்கம் முயற்சி

சென்னை: சென்னை மாநக ராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குளங்கள், ஏரிகள் என மொத்தம் 206 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் 32 நீர்நிலை களைச் சீரமைக்க அறிவார்ந்த நகர் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர்ச் சேகரிப்பை மேம்படுத்தும் வகை யில் சென்னையில் உள்ள 15 கோயில்களின் குளங்களில் மழைநீரைக் கொண்டுசேர்க்க திட்டங்கள் போடப்பட்டுள்ளன. அந்தந்த குளங்களைச் சுற்றி உள்ள வீடுகளின் மேற்கூரை களிலிருந்து சேகரிக்கப்படும் மழைநீரை நேரடியாக குளத்துக் குக் கொண்டுசேர்ப்பது திட்டம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஜூன் 6 முதல் 8 வரை 17வது உலகத் தமிழ் இணைய மாநாடு

சென்னை: தமிழ்நாட்டில் கோயம்புத் தூர் நகரில் 17வது உலகத் தமிழ் இணைய மாநாடு இம்மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது என்று தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத் தின் துணை வேந்தர் கே ராமசாமி அறிவித்து இருக்கிறார். அந்த மாநாடு, ‘அறிவார்ந்த தமிழ்த் தேடல் செயலிகள்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏரி சீரமைப்புப் பணி தொடக்கம்

பல்லாவரம்: சென்னையை அடுத்த பல்லாவரம், கீழ்கட்டளை ஏரி களை, ரூ.14.65 கோடி செலவில் புனர மைக்கும் பணிகள் தொடங் கின. பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் அந்த ஏரிகளைச் சீரமைக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து பசுமைத் தீர்ப்பாயமும் ஏரிகளைச் சீரமைக்க உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில், அந்த ஏரிகளில் மழைநீர் முழுவதுமாக சேமிக்கப் பட்டு கரைகளில் நடைபாதை அமையவும், முக்கிய நீர் ஆதார மாக உள்ள அந்த ஏரிகளை மாற்றும் வகையிலும் பணிகள் நடக்கின்றன.

மேலும்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேல்முருகன் அதிரடி கைது

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இதனால் அவரது கட்சித் தொண் டர்களும் ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நெய்வேலியில் தமிழர் கூட்டமைப்பு சார்பில் காவிரி பிரச்சினை தொடர்பாகப் போராட்டம் நடைபெற்றது.

தினகரன்: தேவை அவசர சட்டம்

தினகரன்

சென்னை: தமிழகத்திற்கு தாமிரம் எடுக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை என்று குறிப்பிடும் அவசர சட்டத்தைச் சட்டப்பேரவையில் உடனடியாக இயற்றவேண்டும் என்று அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதைச் செய்வதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது என்று செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது அவர் கேள்வி எழுப்பினார். “திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையைப் புறக்கணித்தது முறையற்ற செயல். திமுகவினர் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு போட்டி சட்டப்பேரவை நடத்துவது சரியல்ல,” என்றார் தினகரன்.

மேலும்

இடைத்தேர்தல்: பாஜகவுக்குப் பின்னடைவு

இந்தியாவில் நான்கு நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தன்வசமிருந்த இரு தொகுதிகளை இழந்துவிட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா=கோண்டியா, நாகலாந்தில் டோகேஹோ ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதி களுக்கும் பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், கைரானா தொகுதியில் ராஷ்டிரிய லோக் தள வேட்பாளர் தபசும் ஹசன், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங்கை 55,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத் தில் தோற்கடித்தார்.

‘ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும்’

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஒருமையில், மிரட்டும் தொனியில் பேசியதற் காக நடிகர் ரஜினிகாந்த் மன் னிப்புக் கேட்கவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமுற்றவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியபின் சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலை யத்தில் கூடியிருந்த செய்தியாளர் களிடம் பேசினார். மிகவும் ஆவேசமாகப் பேசிய அவர் ஒரு கட்டத்தில், “ஏய்! வேறு ஏதாவது கேள்வி இருக்கா?” என்று கோபமாகவும் ஒருமையில் மரியாதைக் குறைவாகவும் கேட்ட தால் அங்கு கூடியிருந்த ஊடகத் தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Pages