You are here

திரைச்செய்தி

தடைகளைக் கடந்து இன்று வெளியாகிறது ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’

தடைகளைக் கடந்து இன்று வெளியாகிறது ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’

ஜீவா நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம் ‘போக்கிரி ராஜா’. இதில் ஜீவாவுடன் சிபிராஜ், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ‘புலி’ படத்தைத் தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இப்படம் வெளியாக இருக்கிறது.

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அபிநயா

அபிநயா

சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மாற்றுத் திறனாளியான இவர் தற்போது ‘அடிடா மேளம்’ என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநரும் கின்னஸ் சாதனையாளருமான ரூபம் சர்மா இயக்கவுள்ள ‘தி லிட்டில் ஃபிங்கர்’ என்ற ஆங்கிலப் படத்தில் மொத்தம் 56 மாற்றுத் திறனாளிகள் நடிக்க உள்ளதாகவும் அவர்களில் தனது மகளும் ஒருவர் என்றும் அபிநயாவின் தந்தை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கவலையில் மூழ்கிய அஞ்சலி

அஞ்சலி

நடிகர் விமல், அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படம் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்து அதிர வைத்துள்ளது. இதன் மூலம் தனது எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதாகப் புலம்புகிறார் விமல். புதுமுகம் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளிவரப்போகும் படம் ‘மாப்ள சிங்கம்.’ கடந்த 2014ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் அனிருத், சிவகார்த்திகேயன் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள்.

41 வயதில் பிரீத்திக்குத் திருமணம்

பிரீத்தி ஜிந்தா

பாலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிரே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் ஒரு பங்குதாரராகவும் விளங்கினார். சில ஆண்டுகளாக சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிரிக்கெட், நண்பர்களுடன் ஜாலியாக உலகம் சுற்றுவது எனப் பொழுதைப் போக்கிவந்த பிரீத்தி ஜிந்தா, இப்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்துள்ளார்.

மார்ச் 25ஆம் தேதி வெளியாகிறது ‘ஜீரோ’

 அஸ்வினுக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ ‌ஷிவேதா

‘மங்காத்தா’ புகழ் அஸ்வின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஜீரோ’. இதில் அஸ்வினுக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ ‌ஷிவேதா நடித்துள்ளார். மேலும் ஜே.டி.சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை ‌ஷிவ் மோஹா என்பவர் இயக்கியிருக்கிறார். தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் உருவான பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கின்றனர். மார்ச் 25ஆம் தேதி வெளியாகும்.

விரைவில் திரைகாணும் தனு‌ஷின் ‘கொடி’

‘கொடி’ படத்தில் இணைந்து நடிக்கும் தனுஷ், ஷாமிலி.

‘தங்கமகன்’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தை ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இதில் தனுஷ் முதன் முதலாக அண்ணன், தம்பி என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் அரசியல் பிரமுகராகத் தோன்று கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. பொள்ளாச்சிப் பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. பிப்ரவரி மாத மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்று தாமதமாக இப்போதுதான் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாம்.

ரஜினிகாந்த் வழியே என் வழி - அரசியல் பற்றி ராதிகா

நடிகை ராதிகா

அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் வழியே என் வழி என பழனியில் நடிகை ராதிகா தெரிவித்தார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலம்தான் தனது அரசியலுக்கு வருவதைத் தீர்மானிக்கும் என்றார். “பழனி அருகே நடந்து வரும் படப்பிடிப்புக்காக இங்கு வந்தேன். தற்போது கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளேன். நான் தீவிர அரசியலுக்கு எப்போது வருவேன் என எனக்கே தெரியாது.

மாமியார் கொடுமை; கரீஷ்மா கபூர் புகார்

கரீஷ்மா கபூர்

பிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூருக்கும் தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு சமைரா என்ற மகளும் கியான் என்ற மகனும் இருக்கின்றனர். சுமுகமாக சென்றுகொண்டிருந்த இந்தத் தம்பதியினரின் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மதத்தின் பேரில், இருவரும் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர்.

தொலைபேசியில் கதை விவாதம்: வெறுக்கும் பாரதிராஜா

‘என்றும் தணியும்’ பட நிகழ்ச்சியில் பாரதிராஜா, படக்குழுவினர்.

சினிமாவில் எழுத்தாளர்களை இழந்துவிட்டோம் என்று திரையுலக விழா ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார். தற்போது விஞ்ஞானம் பெரிய ளவில் வளர்ந்துவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார். “திருட்டு விசிடியால் சினிமா அழிந்து கொண்டிருக்கிறது என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். விஞ்ஞானம் பெரிய ளவில் வளர்ந்து விட்டது. ஒரு காலத்தில் தொலைக் காட்சி வந்தவுடன் அய்யோ சினிமா கெட்டுப்போய்விடும் என்றார்கள். என்ன சினிமா கெட்டுப்போய்விட்டதா? “திருட்டு டிவிடி வந்தாலும் சினிமா வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

‘குற்றமே தண்டனை’ முதல் பார்வை வெளியீடு

‘குற்றமே தண்டனை’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வு

‘குற்றமே தண்டனை’ முதல் பார்வை வெளியீடு தேசிய விருது வென்ற ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடிக்கும் புதிய படம் ‘குற்றமே தண்டனை’. இப்படத் தின் முதல் பார்வையை வெளி யிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. இயல்பான திரைக்கதையில், எதார்த்தமான வாழ்வியலை புகுத்தி தனது இயக்கம், ஒளிப் பதிவு திறமையால் ‘காக்கா முட்டை’ எனும் அழகான படைப்பை கொடுத்தவர் மணி கண்டன்.

Pages