You are here

திரைச்செய்தி

வருத்தம் தெரிவித்த புது நாயகி

நடிகை அதுல்யா ரவி

ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்பவே தாம் நடிப்பதாக நடிகை அதுல்யா ரவி கூறியுள்ளார். ‘காதல் கண் கட்டுதே’ படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பின் மூலம் கோடம்பாக்கத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் அதுல்யா ரவி. தற்போது இவர் நடித்துள்ள ‘ஏமாளி’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதில் அதுல்யா மிகக் கவர்ச்சி யாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் முணுமுணுப்பு நிலவுகிறது.

அடிதடியும் திகிலும் நிறைந்த படமாக உருவாகிறது ‘ஜானி’

வெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜானி’. “இது ரஜினி படத்தின் தலைப்பு என்பதால் ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது அடிதடி, அதிரடி நிறைந்த திகில் கதை. சுவையான திருப்பங்கள் அதிகம் இருக்கும்,” என்கிறார் இயக்குநர். இதில் கலகலப்பான பாத்திரத்தில் ஆனந்தராஜும், சிபிஐ அதிகாரியாக சாயாஜி ‌ஷிண்டேவும் நடித்துள்ளனராம்.

செல்லப் பிராணிக்கும் தனிக் கணக்கு

செல்லப் பிராணி மீதான நடிகை பிரணீதாவின் பாசத்துக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமூகவலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் தனது செல்ல நாய்க்குட்டி ‘ப்ளூ’வுக்கு எனத் தனிக் கணக்கு தொடங்கி உள்ளாராம். “தன்னுடைய குழந்தை சிறந்த குழந்தை என்றே பெற்றோர்கள் கூறுவார்கள். அவ்வாறு கூற வேண்டியதும் அவசியம். “அப்படித்தான் செல்லப் பிராணிகளை வளர்க்கும் அதன் ஒவ்வொரு உரிமையாளருக்கும் தங்களின் வளர்ப்புப் பிராணிதான் சிறந்தது எனச் சொல்லத் தோன்றும். என்னுடைய ‘ப்ளூ’வை இனி ரசிகர்களும் மற்றவர்களும் சமூக வலைத்தளத்தில் பின் தொடர முடியும்.

‘ஏற்றத்தாழ்வுகள் களைய போராடுவோம்’

சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாகத் தன் மீது குற்றம் சாட்டப்பட்டது முதல் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் அமலா பால். சிலர் தன்னை மையப்படுத்தி வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்புவதாகக் கருதுகிறாராம். தனது மனக் குமுறல்களை நெருக்கமான சிலரிடம் பகிர்ந்து கொள்ள, அவர் மனதில் நினைத்த அனைத்தையுமே வெளிப்படுத்தும் விதமாக ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதை அமலா பாலும் தைரியமாக வெளியிட, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அவரைத் தொடர்புகொண்டு, தைரியமாகச் செயல்பட்டிருப்பதாகவும் அவரது கருத்துகளை ஏற்பதாகவும் கூறி உள்ளனராம்.

சந்தானம் படங்களுக்கு இடையே மோதல்

சந்தானம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. இது தவிர வேறு இரு படங்கள் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் அவரது படங்க ளுக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. தற்போது ‘சர்வர் சுந்தரம்’ படத்திலும் நடித்துக்கொண்டிருக் கிறார் சந்தானம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் இப்படம் உருவாகி யுள்ளது. முன்பே வெளியாகி இருக்க வேண்டிய நிலையில், பணப் பிரச் சினை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தற்போது டிசம்பரில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாம் தயாரிப்புத் தரப்பு.

ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘பில்லா பாண்டி’

தற்போது அதிகமான படங்களில் நடித்து வரும் புது நாயகர்கள் பட்டியலில் ஜி.வி.பிரகா‌ஷுக்கு அடுத்த இடத்தில் உள்ளாராம் ஆர்.கே.சுரேஷ். நாயகன் வேடமோ, குணச்சித்திர கதாபாத்திரமோ, படத்துக்குப் படம் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ‘பில்லா பாண்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆர்.கே.சுரேஷ். இதில் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராகத் தோன்றுவாராம். ‘மேயாத மான்’ படத்தின் வழி ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்துஜா தான் இப்படத்தின் கதாநாயகி. சரவணஷக்தி இயக்க, கே.சி.பிரபாத் என்ற புதுமுகம் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

ரி‌ஷி: ரசிக்க வைக்கும் நல்ல காதல் கதை ‘143’

அமாவாசை அன்று பிறந்த நாயகனுக்கும் பெளர்ணமி அன்று பிறந்த நாயகிக்கும் இடையே மலரும் காதல் என்ன ஆகிறது என்பதை விவரிக்கிறது ‘143’. சதீஷ் சந்திரா பாலேட் இப் படத்தைத் தயாரித்துள்ளார். காதலர்கள் ஆங்கிலத்தில் கூறும் ‘ஐ லவ் யூ’ என்பதன் குறியீட்டுச் சொல்லே ‘143’. இதையே தனது படத்தின் தலைப் பாக வைத்துள்ளார் இயக்குநர் ரி‌ஷி. இப்படத்தின் கதாநாயக னாக நடித்து, கதையையும் அவரே எழுதியுள்ளார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக் கிய கதாபாத்திரங்களை ஏற்றுள் ளனர்.

விழாவில் மனக்குமுறலை வெளிக்காட்டிய இயக்குநர்

கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட சூரி பேசும்போது இயக்குநரின் நடிப்பு ஆசையைப் பற்றியும் அவர் மற்றவர்களை வேலை வாங்கும் விதத்தைப் பற்றியும் பாராட்டுவதுபோல் கிண்டலடித்துப் பேசினார். அதன் பின்னர் பேச வந்த படத்தின் இயக்குநர் கௌரவ் நாராணயன், சூரிக்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலினைப் பற்றி மறைமுகமாகத் தாக்கத் தொடங்கினார்.

பிரான்சில் கொட்டமடிக்கும் நடிகைகள்

இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘குயின்’. இந்தப் படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டு வருகிறது. கங்கனா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தைத் தமிழில் காஜல் அகர்வாலும் தெலுங்கில் தமன்னாவும் கன்னடத்தில் பருல் யாதவ்வும் மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக தமன்னா, காஜல் அகர்வால், பருல் யாதவ், மஞ்சிமா மோகன் ஆகிய நால்வரும் ஒரே சமயத்தில் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளனர்.

ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டும் படக்குழு

நயன்தாரா, சிவகார்த்திகேயன் இணைந்து நடித்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் இவர்களின் ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்கின்றது படக்குழு. நயன்தாரா எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றாற்போல தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கக்கூடியவர். அதுபோல அவர் யாருடன் நடித்தாலும் ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை எனலாம். அண்மையில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஊமைப் பெண்ணாக நடித்திருந்தார். அப்போது அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே ‘கெமிஸ்ட்ரி’ பிரமாதமாக இருந்தது என்று பாராட்டியது திரையுலகம்.

Pages