You are here

திரைச்செய்தி

கன்னடத்தில் பாடும் சிம்பு

தமிழில் பல பாடல்களைப் பாடியுள்ள சிம்பு தற்போது கன்னட படமொன் றில் பாடகராக அறிமுகம் ஆகிறார். ‘இருவுதெல்லவா பிட்டு’ என்ற கன்னட படத்தில் அவர் பாடிய பாடல் இடம்பெறுகிறது. காவிரி விவகாரத்தில் அரசியல் வாதிகளை ஒதுக்கிவிட்டு இரு மாநில மக்களும் பிரச்சினையை சமாதானமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று அண்மையில் சிம்பு கூறியிருந்தார்.

அனுஷ்கா: போலித்தனம் பிடிக்காது

நிஜ வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்கிறார் அனுஷ்கா. அண்மைய பேட்டி ஒன்றில், சொந்த வாழ்க்கைக்கும் சினிமா தொழிலுக்கும் இடையே ஒரு கோடு போட்டு வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து படங்கள் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். ‘பாகுபலி’, ‘பாகமதி’, ‘ஓம் நமோ வெங்கடேசாயா’ என அவர் நடித்த படங்கள் வசூலில் மட்டுமல்லாமல், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து மேலும் பல பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. புதுப் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்டு வருகிறார் அனுஷ்கா.

நகைச்சுவையான திகில் படம் - ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

நகைச்சுவையான திகில் படம் - ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

வெளியீடு காணும் முன்பே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’. அண்மையில் இப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது படத்தின் முன்னோட்டம், பாடல்கள் குறித்து எழுப்பப்பட்டட கேள்விகளுக்கு இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் அளித்த பதில்கள் சில செய்தியாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். படத்தில் ஆபாசம் மிகுந்திருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். வைபவி ஷாண்டில்யா, யா‌ஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.

பாலியல் தொல்லை: கலங்கும் நாயகி

ரெஜினா

பலமுறை பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ள நேரிட்டதாகச் சொல்கிறார் நடிகை ரெஜினா. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தையும் அவர் விவரித்துள்ளார். ஒருமுறை சென்னையில் உள்ள பிரபல ஈகா திரையரங்கம் அருகே உள்ள பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த இளையர் ஒருவர் திடீர் என ரெஜினாவின் உதடுகளைப் பிடித்துள்ளார். இதனால் ரெஜினாவும் நண்பர்களும் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயுள்ளனர்.

விவசாயி ஆகும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளார் விஜய் சேதுபதி. அந்த வகையில் ஒரு படத்தில் விவசாயியாக நடிக்க உள்ளார். ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்க உள்ள அந்தப் படத்தில் ரஜினி நடிப்பதாகவும், இதற்கு ‘கடைசி விவசாயி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்பு கூறப்பட்டது. தற்போது ரஜினிக்குப் பதில் சேதுபதி நடிக்க உள்ளார். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக உருவாகிறது.

எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு - அடா சர்மா

அடா சர்மா

தன்னை வார்த்தைகளால் துன்புறுத்த நினைப்பவர்களைத் தான் அறவே கண்டு கொள்வதில்லை என இளம் நாயகி அடா சர்மா தெரிவித்துள்ளார். தற்போது பிரபுதேவா ஜோடியாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், நடிகையான பிறகு விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என சக நடிகைகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். “இது ஜனநாயக நாடு. தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஒருவருடைய கருத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். அதே சமயம் நடிகைகளைக் கேவலமாகப் பேசுவதை எக்காரணம் கொண்டும் ஆதரிக்கமாட்டேன்.

குழந்தை நட்சத்திரத்துடன் போட்டி போட்டு நடித்த சாய் பல்லவி

சாய் பல்லவி

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கிறது ‘தியா’. இப்படத்துக்கு முதலில் ‘கரு’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களால் அதை மாற்றிவிட்டனர். வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி, ரேகா, நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பிரேமம்’ வெளியான பிறகு தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று பலரும் சாய் பல்லவியைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கான பதிலாக ‘தியா’ அமைந்துள்ளது என்கிறார் சாய் பல்லவி. “இப்படத்தின் கதையைக் கேட்ட பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதுபோன்ற நல்ல கதைக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்.

‘காலடியில் விழுந்து கிடக்கவேண்டாம்’

ராணி முகர்ஜி

பெண்கள் யாரையும் சார்ந்து வாழாமல் தங்கள் திறமையை சுயமாக நிரூபிக்கவேண்டும் என்கிறார் ராணி முகர்ஜி. கணவனுடன் சேர்ந்து வாழும் போது பெண்கள் தங்களது தனித்தன்மையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். “கணவர்களுக்கு மனைவியர் அடிமையாகக்கூடாது. கணவருக்கு கௌரவம் கொடுக்கும் அதேநேரம் நமது கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கணவன் காலடியில் மனைவி விழுந்து கிடக்கவேண்டிய அவசியமும் இல்லை,” என்கிறார் ராணி முகர்ஜி.

‘கோட்டயம் குர்பானா’வில் நகைச்சுவையில் கலக்கும் நயன்தாரா

‘நானும் ரவுடிதான்’ படத்தில் நகைச்சுவைக் காட்சியில் நடித்து நல்ல பெயர் கிடைத்ததால் அதுபோன்ற நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார் நயன்தாரா. தற்பொழுது அவர் ஒப்பந்தம் செய்திருக்கும் ‘கோட்டயம் குர்பானா’ படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் அந்தப் படத்தில் நடிக்க உடனே ஒத்துக் கொண்டாராம் நயன் தாரா.

கருக்கலைப்பு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறாள் ‘தியா’

சாய்பல்லவி

‘லைகா’ தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி, நாக சௌர்யா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் பேய்ப் படம் ‘தியா’. படத்தின் பெயர் முதலில் ‘கரு’ என வைக்கப்பட்டு பின் ‘தியா’ என மாற்றப்பட்டது. சாய்பல்லவி, நாக சௌர்யா எதார்த்தமான வேடம் என்பதால் இயல்பான கணவன் மனைவியாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக்கியமாக கணவனுக்கு என்ன ஆகுமோ எனத் தவிக்கும் மனைவியாக சாய் பல்லவியின் நடிப்பில் அத்தனை எதார்த்தம்.

Pages