You are here

விளையாட்டு

தாக்குதல் வலிமையைக் காட்டிய ரோவர்ஸ்

தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவின் 3வது கோலை அடித்த மகிழ்ச்சியில் முஸ்டாஃபிச் (இடது). படம்: எஸ்பிஎச்

இந்தப் பருவ எஸ்-லீக் காற்பந்தில் கிண்ணத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் தெம்பனிஸ் ரோவர்ஸ் நேற்று முன்தினம் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஜூரோங் வெஸ்ட் விளையாட்ட ரங்கில் இரண்டாயிரத்திற்கும் மேற் பட்ட ரசிகர்கள் திரண்டிருக்க, ஹவ்காங் யுனைடெட் குழுவை 4-1 என்ற கணக்கில் நசுக்கியது தெம்பனிஸ் குழு. முதல் 20 நிமிடங்களுக்குள்ளாகவே மூன்று முறை எதிரணியின் வலைக்குள் பந்தை உதைத்தது அக்குழு.

அமிதாப்பை வியப்பில் ஆழ்த்திய கெய்ல்

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்குத் தமது மட்டையைப் பரிசாக வழங்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். “திரையுலக சகாப்தம் அமிதாப்பிற்கு எனது மட்டையைப் பரிசளிப்பதில் பெருமை கொள்கிறேன். அவரது படங்களும் அவரது ‘ஸ்டைலும்’ எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று கெய்ல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கெய்லின் பரிசால் மகிழ்ந்துபோன அமிதாப் ஃபேஸ்புக், டுவிட்டர் மூலமாக அவருக்குத் தமது நன்றிகளைக் கூறிக்கொண்டார். படம்: டுவிட்டர்

புதிய ஃபிஃபா தலைவர்

காற்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் சுவிட்சர்லாந்தின் கியானி இன்ஃபேன்டினோ. படம்: ராய்ட்டர்ஸ்

ஸுரிக்: அனைத்துலகக் காற் பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக சுவிட்சர்லாந்தின் கியானி இன்ஃபேன்டினோ, 45, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய காற்பந்துச் சங்கக் கூட்டமைப்பின் (யூஃபா) தலைமைச் செயலாளரான இவர் இரண்டாவது வாக்கெ டுப்பில் 115 வாக்குகளைப் பெற்றார். பஹ்ரைன் அரச குடும்பத் தைச் சேர்ந்தவரும் ஆசிய காற்பந்து சம்மேளனத்தின் தலைவருமான சல்மான் பின் இப்ராகிம் அல்-கலிஃபா இரண்டாவதாக வந்தார். முறைகேட்டில் ஈடுபட்டதால் ஆறு ஆண்டு இடைக்காலத் தடை பெற்ற செப் பிளாட்டரைத் தொடர்ந்து ஃபிஃபா தலைவ ராகப் பொறுப்பேற்கிறார் கியானி இன்ஃபேன்டினோ.

சிறுவனுக்கு மெஸ்ஸியின் பரிசு

ஐந்து வயதுச் சிறுவன் முர்ட்டாஸா அகமதி

காபூல்: உள்நாட்டுப் போரால் தத்தளித்து வரும் ஆப்கானிஸ் தானைச் சேர்ந்த முர்ட்டாஸா அகமதி (படம்) எனும் ஐந்து வயதுச் சிறுவனின் ஏக்கம் தீர்ந்தது. பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் ரசிகனான இவனுக்கு மெஸ்ஸி பெயர் பொறித்த சீருடையை அணிய வேண்டும் என்பது பலநாள் ஆசை. வறுமை காரணமாக அதை வாங்கித் தரமுடியாத நிலையில் இருந்த அவனுடைய தந்தை, மெஸ்ஸியின் அர்ஜெண்டினா சீருடை போல வண்ணம் கொண்ட ஒரு பாலித்தீன் பையில் ‘10’ என மெஸ்ஸியின் எண்ணை எழுதி, அதைத் தம் மகனுக்கு மாட்டிவிட்டு காற்பந்து ஆடச் செய்தார். இந்தப் படம் இணையத்தில் வேகமாகப் பரவியது.

மெருகேறி வருகிறது மேன்யூ

மெருகேறி வருகிறது மேன்யூ

ஓல்ட் டிராஃபர்ட்: இந்தக் காற் பந்துப் பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் மீது சுமத்தப் படும் முக்கிய குற்றச்சாட்டே அவர்கள் முன்பு போல் இல்லாமல் அலுப்புத் தட்டும் வகையில் விளையாடுகின்றனர் என்பதும் ஓர் ஆட்டத்தில் வென்றால் பின்னர் அதுபோல் தொடர்ச்சியாக மற்ற ஆட்டங்களில் அவர்களால் ஆட முடிவதில்லை என்பதும்தான்.

கடந்த ஆண்டின் சிறந்த விளையாட்டாளர்

யிப் பின் சியூ, 23 (வலது),

உடற்குறையுள்ள நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ, 23 (வலது), கடந்த ஆண்டின் சிறந்த சிங்கப்பூர் விளையாட்டாளருக்கான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விருதைத் தட்டிச் சென்றார். தசை வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள யிப், சென்ற டிசம்பரில் நடந்த உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுப் போட்டிகளில் எஸ்2 50 மீட்டர் பின்நீச்சல் பிரிவில் உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்றார்.

காலிறுதியை நோக்கி சிட்டி

தலையால் முட்டி கோலடிக்க முயன்ற யாயா டூரே.

கியவ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரில் கால் இறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் உக்ரேனின் டைனமோ கியவ் குழுவை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து 3-1 எனும் கோல் கணக்கில் பந்தாடியது இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி குழு. முற்பாதியின் 15வது நிமிடத் தில் செர்ஜியோ அகுவேரோவும் 40வது நிமிடத்தில் டாவிட் சில்வாவும் கோலடிக்க, 2-0 என்ற முன்னிலையுடன் இடைவேளைக் குச் சென்றது சிட்டி. 58வது நிமிடத்தில் கியவ் குழுவின் புயால்ஸ்கி கோலடித்து சிட்டியின் முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார்.

யுவராஜின் பொறுமை, நெஹ்ராவின் நேர்த்தி

இந்திய ஆட்டக்காரர் ரோகித் சர்மா (இடது). படம்: ஏஎஃப்பி

மிர்பூர்: வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் அமைத்து இந்திய வீரர்களை மிரளச் செய்ய லாம் என பங்ளாதேஷ் அணி தீட்டிய திட்டம் தவிடுபொடியானது. கடந்த ஆண்டில் பாகிஸ்தான், இந்தியா, தென்னாப்பிரிக்கா என உலகின் முதல்நிலை அணிகளை ஒருநாள் போட்டிகளில் மண்ணைக் கவ்வச் செய்தது பங்ளாதேஷ் அணி. அந்த ஊக்கத்தோடு சொந்த மண் சாதகமும் சேர்ந்துகொள்ள, தம்முடைய கிரிக்கெட் படை டோனி தலைமையிலான இந்தியப் படையைப் புரட்டியெடுக்கும் என்ற ஆசையில், நேற்று முன்தினம் ஆசியக் கிண்ணத்தின் முதல் போட்டியைப் பார்ப்பதற்காக ஷெர்-இ-பங்ளா அரங்கை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர் பங் ளாதேஷ் ரசிகர்கள்.

ஆர்சனலைப் புரட்டி எடுத்த மெஸ்சி

இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்த மெஸ்சி.

லண்டன்: ஆட்டம் முடிய ஏறத்தாழ 20 நிமிடங்கள் இருந்தபோது பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி போட்ட இரண்டு கோல் களால் சொந்த மண்ணில் விளை யாடிய ஆர்சனல் அதன் ரசிகர் களின் கண்ணெதிரே தோல்வி யைத் தழுவியது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் வெற்றி அடைந்த பார்சிலோனா, காலிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. தனது சொந்த அரங்கில் நடை பெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 2=0 எனும் கோல் கணக்கில் வீழ்ந்த ஆர்சனல் பார்சிலோனாவின் அரங்கில் நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்று ஆட்டத்தை வென்று காலிறுதிக்குத் தகுதி பெறுவது சந்தேகம்தான் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

தெம்பனிஸ் அபார வெற்றி

ஆசிய காற்பந்து கிண்ணப் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் டெம்பனிஸ் வீரர்கள்.

ஆசிய காற்பந்து கிண்ணப் போட்டியில் பங்ளாதே‌ஷின் ஷேக் ஜமால் தன்மோண்டி குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் தெம் பனிஸ் ரோவர்ஸ் குழு பந்தாடியது. இதுவே இந்தப் போட்டியில் தெம்பனிஸ் பதிவு செய்திருக்கும் ஆகப் பெரிய வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் பட்டியலின் முதல் இடத்துக்கு தெம்பனிஸ் முன்னேறி உள்ளது. ஜாலான் புசார் விளையாட் டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தைக் காண 2,378 ரசிகர்கள் கூடினர். தெம்பனிஸ் குழுவின் நட்சத்திர வீரர் ஜெர்மேன் பென்னண்ட் கோல் போடாவில்லை என்ற போதிலும் தமது அணியின் நான்கு கோல்களுக்கும் அவர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pages