You are here

வாழ்வும் வளமும்

மனக் காயத்துக்கும் முதலுதவி தேவை

முதலுதவி என்பது உடலில் காயமடைந்தவர்களுக்கு மட்டுமல்ல, மனதில் காயமடைந்த வர்களுக்கும் அவசியம் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே போதுமான அளவு ஏற்படவில்லை. ‘முதலுதவி’ என்பது முக்கிய மானது. சாலைகளில் யாராவது விபத்தில் சிக்கியிருந்தால், உடனே அவருக்கு முதலுதவி அளித்து அவரைக் காப்பாற்ற தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால், உடலில் காயமுற்ற பலரும் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் .

சிங்கப்பூர் இந்தியரின் சாதனை வரலாறு

முஹம்மது ஃபைரோஸ்

ஒரு நாள் தமது 18 வயது பேரன் சஞ்ஜேயுடன் திரு எஸ்.ஏ. நாதன் அளவளாவிக் கொண்டிருந்த போது இந்தியர்கள் அனைவரின் சாதனைகள், பங்களிப்புகளை உள்ளடக்கும் நூல் ஏதேனும் உள்ளதா என சஞ்ஜே கேட்ட கேள்வி அவரைச் சிந்திக்க வைத்தது. சஞ்சேவுக்கு சிங்கப்பூர் இந்தியர்களின் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது. அத்தகைய நூல் களைத் திரு நாதன் தேடிப் பார்த்தபோது சில நூல்கள் கண் களில் தென்பட்டாலும் அனைத்து இந்தியர்களின் பங்களிப்புகளை உள்ளடக்கும் அளவிற்கு அவை முழுமையானதாக இல்லை என் பதை உணர்ந்தார்.

திறன்பேசிகள் புதிதுபோல் இருக்க...

நாட்கள் செல்லச் செல்ல திறன் பேசிகளின் செயல்திறன் குறை வதைக் காணலாம். புத்தம் புதிதாக இருந்தபோது எப்படிச் செயல்பட்டதோ, இப்போதும் அப்படியே இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். புதிதாக வாங்கியபோது அவை எப்படிச் செயல்பட்டனவோ, அப் படியே தொடர்வதில்லை. இதனால் நாம் சற்று ஏமாற்றமடையலாம். இருந்தபோதும், சில எளிமையான விஷயங்களைக் கையாண்டால் திறன்பேசியின் செயல்திறனை, கிட்டத்தட்ட அதைப் புதிதாக வாங்கியபோது எப்படி இருந்ததோ, அதைப் போன்று நீடிக்கச் செய்யலாம். உறையும் திரைக் காப்பானும்: திறன்பேசிக்கு உறையிடுவதும் ‘ஸ்கிரீன் புரொடெக்டர்’ எனும் திரைக் காப்பானை ஒட்டுவதும் நல்லது.

பாதுகாப்புப் பிரச்சினை: எச்சரிக்கும் உலாவி

‘ஹேக்கர்கள்’ எனப்படும் இணைய ஊடுருவிகள் முன்னர் நுழைந்து முடக்கிய ஓர் இணையத்தளத் திற்குப் பயனீட்டாளர்கள் செல்ல முயன்றால் கவனமாக இருக்கும் படி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய வசதியை மோஸிலா ஃபயர் ஃபாக்ஸ் உலாவி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நிகராகத் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதற்காக இணைய ஊடுரு விகள் அதிக அளவில் போலி யான இணையத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து பயனீட்டாளர்களைப் பாதுகாக்க ஃபயர்ஃபாக்ஸ் உலா வியில் புதிய அம்சம் ஒன்று அறிமுகமாகவுள்ளது.

மடக்கு ஐஃபோன்: ஆப்பிள் நிறுவனத்திற்குக் காப்புரிமை

புத்தகத்தைப் போல மூடியும் திறந்தும் வைத்துக்கொள்ளும் வகையில் மடக்கு ஐஃபோனை உருவாக்கும் பணியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. மடக்கு ஐஃபோன் தொடர்பாக எல்ஜி நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மடக்கு ஐஃபோனுக்கு காப்புரிமை கோரி கடந்த 2014ஆம் ஆண்டிலேயே அமெரிக்கக் காப் புரிமை, வர்த்தகச் சின்ன அலு வலகத்திடம் ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பித்து இருந்ததாகவும் இம்மாதத்தில் காப்புரிமை அளிக் கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “மின்னணு சாதனத்தை மடித்து வைத்துக்கொள்ளும் விதமாக வளையக்கூடிய ஒரு பகுதி அதில் இருக்கலாம்.

திண்ணப்பனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ப. பாலசுப்பிரமணியம்

தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்கிற் காக முதல்முறையாக நடத்தப்படும் ‘தமிழ்ச்சுடர்’ சமூக விருது நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய வாழ் நாள் சாதனையாளர் விருதினைக் கைப்பற்றினார் 82 வயது டாக்டர் சுப.திண்ணப்பன்.

‘தமிழ்ச்சுடர்’ எனும் மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவின் சமூக விருதுகள் நிகழ்ச்சி தமிழ்ச் சமூ கத்திற்கு குறிப்பிடத்தக்க வகை யில் பங்களிப்பவர்களையும் தமிழ் மொழிக்குப் பங்காற்றி வருபவர் களையும் கெளரவிக்கும் தளமாக விளங்குகிறது.

தாத்தா-பாட்டி தின கொண்டாட்டம்; 500 குடும்பத்தினர் பங்கேற்பு

பெரிய குடும்பமாக மாறிய 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் தாத்தா-பாட்டி தினத்தைக் கொண்டாடும் விதமாக சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் ஒன்று கூடினர். நாச்சியப்பன் தேனம்மை (இடமிருந்து இரண்டாவது), 31, அவரது மகன் விஷ்ணு கண்ணப்பன், 7, தாய் சுந்தரம் சாந்தா, 65, அவர்களது பணிப்பெண் வேய் வேய், 26, (வலது) ஆகியோர் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் பாட்டி தாத்தாவுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் நடத்தப்பட்ட வண்ணம் தீட்டும் பட்டறையில் கலந்துகொண்டு ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுகின்றனர்.

ஆசியான் இந்தியா; தமிழ் கவிதை, கட்டுரைப் போட்டி

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை முன்னிட்டு பலதரப் பட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று தமிழ் கட்டுரை, கவிதைப் போட்டி. இப்போட்டியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று சிறுவர் பிரிவு (10-15 வயது), மற்றொன்று இளையர் பிரிவு (16-25 வயது). இரண்டு பிரிவுகளிலுமே “என் வம்சாவளி, என் இல்லம்: ஆசியான் இந்தியப் பார்வை” அல்லது “இன்னும் 25 ஆண்டு களில் ஆசியான் இந்தியா” ஆகிய இந்த இரண்டு தலைப்பு களில் ஏதேனும் ஒன்றில் படைப்பு கள் அமையலாம். கட்டுரைகள் 250 முதல் 1,500 வார்த்தைகள் வரை இருக்கலாம்.

Pages