தொற்று கூடினாலும் ஆபத்து இல்லை

சிங்கப்பூர் நிலவரத்தை விளக்கினார் சுகாதார அமைச்சர் ஓங்

கடந்த ஒரு மாத கால­மாக கொவிட்-19 கிரு­மித்­தொற்று அலை­யின் இடைப்­பட்ட பகு­தி­யில் சிங்­கப்­பூர் இருந்து வரு­வ­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்­ளார். ஒரு மாதத்­திற்கு முன்­னர் 1,400 என பதி­வான அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை கடந்த வாரம் 4,000க்கு அதி­க­ரித்த நிலை­யில் அமைச்­சர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

தற்­போ­தைய தொற்று எண்­ணிக்­கை­யில் 30% மறு­தொற்­றுச் சம்­ப­வங்­கள் என்­றார் அவர். முந்­திய தொற்று அலை­யின்­போது 20% முதல் 25% வரையிலான விகி­தத்­தில் பதி­வான மறு­தொற்று விகி­தத்­தைக் காட்­டி­லும் இது அதி­கம். தொற்று எண்­ணிக்கை அதி­கரித்து வந்­தா­லும் தற்­போ­தைய கொவிட்-19 திரிபு மிக மோச­மான பாதிப்பை ஏற்­படுத்­தக்­கூ­டி­யது என்­ப­தற்­கான ஆதா­ரம் எது­வும் இல்லை என்­றும் திரு ஓங் தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை 80ஆக இருந்த நிலை­யில் கடந்த ஒரு மாத காலத்­தில் 220க்கு அந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. இருப்­பி­னும், தொற்று கடு­மை­யா­கப் பர­விய காலத்­தில் பதி­வான எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் இது மிக­வும் குறைவு. தீவிர சிகிச்சை நாடு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் நிலை­யா­க­வும் குறை­வா­க­வும் நீடிக்­கிறது. கடந்த ஒரு மாதத்­தில் அந்­தப் பிரி­வில் 10க்கும் குறை­வா­ன­வர்­களே அனு­ம­திக்­கப்­பட்டு வந்ததாக அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மம் நேற்று நடத்­திய வரு­டாந்­திர செயல்­திட்­டக் கருத்­த­ரங்­கில் பங்­கேற்று அவர் பேசி­னார்.

“கொவிட்-19 பெருந்­தொற்று சிர­மத்­தி­லி­ருந்து நாம் எவ்­வ­ளவு தூரம் கடந்து வந்­துள்­ளோம் என்­பதை தற்­போ­தைய தொற்று அலை தெளி­வாக உணர்த்­து­கிறது. இதே­போன்ற தொற்று அலை இருந்­த­போ­தும் நாம் நமது வழக்­க­மான வாழ்க்­கை­யைத் தொடர்ந்­தோம். தொற்று எண்­ணிக்­கை­யைக் கண்டு பத­ற­வில்லை. உள்­ளூர் தொற்று நிலைமை இவ்­வா­று­தான் இருக்­கும்,” என்­றார் திரு ஓங்

சிங்­கப்­பூ­ரில் தற்­போ­தைய தொற்று எண்­ணிக்கை ஏற்­றத்­துக்கு சுற்­றுப்­ப­ய­ணி­கள் கார­ணம் என்று வெளி­யான கருத்தை அவர் மறுத்­தார்.

“உள்­ளூ­ரில் பர­வும் தொற்று இது. எப்­போ­தும் சமூ­கத்­தில் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து மற்­ற­வ­ருக்­குப் பர­வும் தன்மை கொண்­டது. இது­போன்ற நிலை­யில், தனிப்­பட்­டோ­ரி­டம் சமூ­கத்­தி­லும் மறு­தொற்று காணப்­படும். தற்­போது நடை­பெறு­வது அது­தான். தற்­போ­தைய தொற்று அலை இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது அல்ல,” என்று திரு ஓங் விளக்­கி­னார்.

சமூ­கப் பங்­கா­ளி­களும் பொது மருத்­து­வர்­களும் தற்­போ­தைய நிலை­மையை தங்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் தெளி­வா­கப் புரிய வைக்­கு­மாறு அவர் கேட்­டுக்­கொண்­டார்.

“உடல்­நிலை சரி­யில்­லாத நோயா­ளி­கள் வீட்­டி­லேயே தங்கி இருப்­ப­தை­யும் முகக்­க­வ­சம் அணி­வ­தை­யும் தொடர வேண்­டும். அறு­பது வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களும் எளி­தில் பாதிப்­புக்கு ஆளா­கக்­கூ­டி­ய­வர்­களும் வரு­டாந்­திர தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும்,” என்­றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!