கோலாலம்பூரில் 17 இருசக்கர வாகனங்கள் தீக்கிரை; பிடிபட்டவரிடம் விசாரணை

கோலா­லம்­பூ­ரில் உள்ள பிர­பல கடைத்­தொ­கு­தி­யின் முன்­னால் 13 மோட்­டார்­சைக்­கிள்­களும் 4 மின்ஸ்கூட்­டர்­களும் கொளுத்­தப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் 34 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்டு உள்­ளார்.

சம்­ப­வம் வியா­ழக்­கி­ழமை பிற்­ப­கல் 3.45 மணி­ய­ள­வில் ‘சூரியா கேஎல்­சிசி’ கடைத்­தொ­கு­திக்கு வெளியே நடை­பெற்­ற­தாக பெர்னாமா கூறி­யது.

தீ மள­ம­ள­வென்று பர­வி­ய­தில் 9 மோட்­டார்­சைக்­கிள்­களும் 4 மின்ஸ்கூட்­டர்­களும் முழு­மை­யாக எரிந்து எலும்­புக்­கூ­டா­கக் கிடந்­தன. மேலும் 3 மோட்­டார்­சைக்­கிள்­கள் பாதி எரிந்த நிலை­யில் காணப்­பட்­டன.

இரு தீய­ணைப்பு நிலை­யங்­களில் இருந்து மூன்று தீய­ணைப்பு வாக­னங்­களும் 15 தீய­ணைப்­பா­ளர்­களும் விரைந்து சென்று மாலை 4 மணி­ய­ள­வில் தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­த­தாக கோலா­லம்­பூர் தீய­ணைப்பு, மீட்­புத் துறை­யின் பேச்­சா­ளர் கூறி­னார். இருப்­பி­னும், யாருக்­கும் காய­மில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார்.

கைதுசெய்­யப்­பட்ட ஆட­வர் வரும் செவ்­வாய்க்­கி­ழமை (ஏப்­ரல் 19) வரை விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் எதற்­காக அவர் வாக­னங்­க­ளைக் கொளுத்­தி­னார் என்­பது விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் டாங் வாங் மாவட்டக் காவல்­துறை துணை ஆணை­யர் நூர் டெல்­ஹான் யஹாயா நேற்று அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார்.

வேண்­டு­மென்றே தீ மூட்­டும் குற்­றத்­துக்கு மலே­சி­யா­வில் அதிக­பட்­ச­ம் 14 ஆண்டு சிறை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!