1 மில்லியன் மரம் இலக்கு முன்கூட்டி எட்டப்படும்

சிங்கப்பூர் முழுவதும் மூன்றாண்டுகளில் 540,000 மரங்கள் அறிமுகம்

நாடு முழு­வ­தும் ஒரு மில்­லி­யன் மரங்­களை நடுவதற்காக வகுக்கப்பட்ட இலக்கை மூன்­றாண்டுக்கு முன்­னரே சிங்­கப்­பூர் எட்டிவிடுவது­போ­லத் தோன்று­கிறது.

‘ஒரு­மில்­லி­யன் மரங்­கள்’ இயக்­கம் 2020 ஏப்­ரல் மாதம் தொடங்­கப்­பட்­டதுமுதல் இது­வரை அந்த எண்ணிக்கையில் கிட்­டத்­தட்ட பாதி­ய­ளவு, அதா­வது 540,000 மரங்­கள் குடி­ய­ரசு முழு­வ­தும் ஆங்­காங்கே நடப்­பட்­டு­விட்­டன.

2030ஆம் ஆண்­டுக்­குள் ஒரு மில்­லி­யன் மரங்­களை நட­வேண்­டும் என்­பது இந்த இயக்­கத்­தின் இலக்கு. ஆனால், தற்­போ­தைய சூழ­லில் 2027ஆம் ஆண்டே அந்த இலக்கை எட்­டி­வி­டும் நிலை உள்­ள­தாக தேசிய பூங்காக் கழகம் நேற்று கூறி­யது.

சாலை ஓரங்­கள், ஜூலை தீவு மற்­றும் இதர தொழி­லி­யல் பேட்­டை­கள் ஆகிய இடங்­க­ளோடு இயற்கை வனப் பாது­காப்பு மற்­றும் தோட்­டங்­க­ளி­லும் மரங்­கள் நடப்­பட்­ட­தாக அது தெரி­வித்­தது.

மேலும், சுங்கை பூலோ சதுப்­பு­நில இயற்­கை­வ­ளப் பாது­காப்­பி­டம், ஜூரோங் லேக் தோட்­டங்­கள். புலாவ் உபின், பாசிர் ரிஸ் பூங்கா, தெலுக் பிளாங்கா மலைத் தோட்­டம் போன்­ற­வற்­றி­லும் மரங்­கள் நடப்­பட்­ட­தாக கழகத்­தின் அறிக்கை குறிப்­பிட்­டது.

“மரம் நடும் முயற்­சிக்கு சமூ­கத்­தைச் சேர்ந்த 75,000க்கும் மேற்­பட்­டோர் கைகொ­டுத்­த­னர். ‘பிளாண்ட்-எ-ட்ரீ’ என்­னும் திட்­டத்­தில் பெரு­நிறு­வ­னங்­களும் இதர அமைப்­பு­களும் மரங்­களை நட தங்­க­ளது பங்கை அளித்­த­ன,” என்­றது கழகம்.

சிங்­கப்­பூ­ரின் பசு­மைப் பய­ணம் 1963 ஜூன் 16ஆம் தேதி தொடங்­கி­ய­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார்.

நாட்­டின் முதல் பிர­த­மர் லீ குவான் இயூ அவர்­கள் அந்­தத் தேதி­யில்­தான் நாட­ளா­விய மரம் நடும் பிர­சா­ரத்­தைத் தொடங்­கி­வைத்­தார் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தப் பிர­சாரத்­தைத் தொடங்­கிய ஒரு சில ஆண்­டு­களில் ஆண்­டு­தோறும் ‘மரம் நடும் நாள்’ கடைப்­பிடிக்கப்படுவதை அவர் வழக்­க­மாக்­கி­னார். தீவு முழு­வ­தும் மரங்­களை நட மக்­கள் முன்­வரு­வ­தற்­காக அந்தக் கலா­சா­ரம் பின்­பற்­றப்­பட்­டது. நாமும் அத­னைத் தொடர்­வ­தோடு வருங்­கா­லத்­தி­லும் இந்த முயற்சி நீடிக்க வேண்­டும்,” என்று திரு லீ கூறி­னார்.

நாட­ளா­விய மரம் நடும் பிர­சா­ரம் தொடங்­கப்­பட்ட 60 ஆண்­டைக் குறிக்­க நேற்று சிங்­கப்­பூர் பூமலை­யில் நடைபெற்ற நிகழ்­வில் பங்­கேற்று அவர் பேசி­னார்.

“இப்­படி ஓர் இயக்­கம் தொடங்­கப்­படா­மல் இருந்­தி­ருந்­தால் வெறும் கான்­கி­ரீட் கற்­களும் இரும்­புக் கம்­பி­களும் நிறைந்த நாடாக சிங்­கப்­பூர் எளி­தில் மாறி இருக்­கும். கார­ணம் அந்­தக் காலத்­தில் அதற்­கான தேவை இருந்­தது. கான்­கி­ரீட் கற்­களும் இரும்­புக் கம்­பி­களும் போது­மான அள­வுக்­குக் கிடைத்­தன. இருப்­பி­னும் 60 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தொடங்­கப்­பட்ட நற்­செ­ய­லால் உல­கின் பசுமை நிறைந்த நக­ரங்­களில் ஒன்­றாக தற்­போது சிங்­கப்­பூர் திகழ்­கிறது.

“நமது நக­ரின் முக்­கிய இடங்­களில் இயற்கை வளம் கொழிக்­கிறது. இயற்கை­வ­ளப் பாது­காப்­புப் பகு­தி­களும் பசு­மைச் சூழ­லைத் தொடர்­கின்­றன. நமது தீவு முழு­வ­தும் பூங்­காக்­களும் பசுமை நிறைந்த பொது­வெ­ளி­களும் நிறைந்து காணப்­ப­டு­கின்­றன.

“ஒரு மில்லியன் மரங்கள் என்னும் இயக்கம் வெறும் எண்ணிக்கை அடிப் படையிலானது மட்டுமல்ல. மரங்கள் நிழலையும் குளுமையான சூழலையும் தருவதோடு காற்றின் தரத்தையும் மேம்படுத்துகின்றன. கரிமத்தைப் பிரித்து பருவநிலை மாற்றத் தணிப்புக்குக் கைகொடுக்கின்றன,” என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரின் 60 ஆண்டு பசு­மைப் பய­ணத்­தைக் குறிக்­கும் வகை­யில் பூம­லை­யில் நேற்று 60 மரங்­கள் நடப்­பட்­டன. பசு­மைப் பிர­சா­ரத்­தைத் தொடங்கி வைத்­த­போது திரு லீ குவான் இயூ பயன்­ப­டுத்­திய ‘மெம்­பாட்’ மர­மும் நேற்று நடப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!