மலேசியாவின் ஆறு மாநிலங்களில் தேர்தல்

மலே­சி­யா­வின் ஆறு மாநி­லங்­களில் ஒரே நேரத்­தில் தேர்­தல் நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

வரும் ஜூலை மாதம் இத்­தேர்­தலை எதிர்­பார்க்­க­லாம் என்று எதிர்க்­கட்­சி­யான பாஸ் கட்­சி­யின் உயர்­மட்­டத் தலை­வர் ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

மூன்று மாநி­லங்­களில் ஆட்சி நடத்­தும் பாஸ் கட்­சி­யின் துணைத் தலை­வ­ரும் கிளந்­தான் மாநில துணை முதல்­வ­ரு­மான முஹ­மட் அமர் நிக் அப்­துல்லா, ஆறு மாநி­லங்­களில் சட்­ட­மன்­றத்­தைக் கலைக்­கும் பணி ஜூன் மாதத்­தில் தொடங்­கும் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னார்.

ஆறு மாநில அர­சாங்­கங்­ களுக்கு இடை­யி­லான புரிந்­து­ணர்­வின் அடிப்­ப­டை­யில் இது இடம்­பெ­று­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான், பினாங்கு. கிளந்­தான், திரெங்­கானு, கெடா ஆகிய ஆறு மாநிங்­களும் இவ்­வாண்டு இரண்­டா­வது பாதி­யில் சட்­ட­மன்­றத் தேர்­தலை எதிர்­நோக்­கு­கின்­றன.

கிளந்­தான், திரெங்­கானு, கெடா ஆகிய மூன்று மாநி­லங்­களில் பாஸ் கட்சி தலை­மை­ யிலான ஆட்சி நடை­பெ­று­கிறது.

மலே­சி­யா­வின் முன்­னணி எதிர்க்­கட்சி கூட்­ட­ணி­யான பெரிக்­காத்­தான் நேஷ­ன­லி­லும் அக்­கட்சி முக்­கிய அங்­கம் வகிக்­கிறது.

இதர மூன்று மாநி­லங்­களில் பிர­த­மர் அன்­வார் தலை­மை­யில் செயல்­படும் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி ஆட்சி நடத்­து­கிறது.

“கிளந்­தான் மாநில அர­சாங்­கம் ஏற்கெனவே ஜூன் மாதத்­தில் சட்­ட­மன்­றத்­தைக் கலைக்க முடிவு செய்­துள்ளது,” என்று திரு அமர் ஞாயிறன்று தெரி­வித்தார்்.

கிளந்­தான் முதல்­வர் அஹ­மட் யாக்­கோப் அளித்த நோன்புப் பெருநாள் விருந்து நிகழ்ச்­சிக்­குப் பிறகு அவர் பேசி­னார்.

ஆறு மாநில முதல்­வர்­களும் ஒன்­றா­கச் சந்­தித்­த­போது தேர்­தல் குறித்து புரிந்­து­ணர்வு எட்­டப்­பட்ட தாக கடந்த பிப்­ர­வ­ரி­யில் கூறிய சிலாங்கூர் முதல்­வர் அமி­ரு­தீன் ஷாரி, ஜூன் இறு­தி­யில் சட்டமன்­றத்­தைக் கலைப்­ப­தற்­கான நட­ வ­டிக்­கை­களை அவர்­கள் எடுப்­பார்­கள் என்­றார்.

சட்­ட­மன்­றம் கலைக்­கப்­பட்ட பிறகு தேர்­தலை நடத்த தேர்­தல் ஆணை­யத்­துக்கு அறு­பது நாள்­கள் அவ­கா­சம் உள்­ளது.

ஆனால் அர­சாங்­கம் கலைக்­கப்­பட்ட ஒரு மாதத்திலேயே ஆணை­யம் தேர்­தலை நடத்தி வரு­கிறது.

கடந்த நவம்­பர் மாதம் நடை­பெற்ற நாடா­ளு­மன்ற பொதுத் தேர்­த­லின்­போது மூன்று மாநிலங்கள் மட்­டுமே ஒரே நேரத்­தில் தேர்­தலை நடத்த முடிவு செய்­தன.

இத­னால் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் எந்­தக் கட்­சிக்­கும் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை. இந்த நிலை­யில் கெ அ­டி­லான் கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம், நீண்­ட­கால எதிர்க்கூட்­ட­ணி­யான தேசிய முன்­னணியுடன் சேர்ந்து ஆட்­சியை அமைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!