தங்கச்சங்கிலிகளை திருடியதாக நம்பப்படும் 14 வயதுச்சிறுவன் கைது

சைனடா டவுன் நகைக் கடை­யில் இரண்டு தங்­கச் சங்­கி­லி­க­ளைத் திரு­டியதாக நம்பப்படும் 14 வயது சிறு­வனை காவல்­து­றை­யி­னர் கைது செய்து உள்­ள­னர்.

அவற்­றின் மதிப்பு $23,000. சென்ற ஞாயிற்­றுக்­கிமை நடந்த சம்­ப­வத்­தில் கடைக்­கா­ரர் திரும்­பிய சில நொடி­களில் சிறு­வன் நகை­களை எடுத்­துக்­கொண்டு ஓடி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஞாயிறு மாலை 5.30 மணி­ய­ள­வில் முகக்­க­வ­சம் அணிந்து வந்த அச்­சி­று­வன், சைனா டவு னில் உள்ள சுங் ஹுவா ஜேட் அண்ட் ஜூவல்­லரி நகைக் கடைக்­குச் சென்று தங்­கச் சங்கிலிகளை காட்­டு­மாறு கேட்டு உள்­ளான்.

அப்­போது தனது சகோ­த­ர­ரு­டன் சேர்ந்து குடும்ப நகைக் கடையை நடத்­தும் திரு டெங் வெய் சியோங், 45, சிறு­வ­னுக்கு இரண்டு தங்­கச் சங்­கி­லிகளைக் காட்­டி­னார். ஆனால் கன­மான சங்­கிலி யைக் காட்­டு­மாறு சிறு­வன் கேட் டான்.

இத­னால் கன­மான இரண்டு தங்­கச்­சங்­கி­லி­களை சிறு­வ­னுக்கு அவர் காட்­டி­னார்.

பின்­னர், முத­லில் காட்­டிய இரண்டு தங்­கச் சங்­கி­லி­களை மீண்­டும் பெட்­ட­கத்­தில் வைக்க திரு டெங் திரும்­பிய சில நொடி­களில் சிறு­வன் அவர் இரண்ட வதாகக் காட்டிய இரண்டு தங்­கச் சங்­கி­லி­களை எடுத்­துக் கொண்டு ஓடியதை கண் காணிப்புக் கேமரா காட்டியது. திரு டெங்­கும் அவ­ரது சகோ­த­ரர் டெங் வெய் ஸின்­னும், 39, சிறு­வனை துரத்­திச் சென்று ஓடி ஒருவழி­யாக மடக்­கிப் பிடித்­த­னர். சிறு­வனை கடைக்கு அழைத்து வந்த அவர்­கள் காவல்­து­றைக்கு தக­வல் கொடுத்­த­னர்.

பார்க் ரோட்டில் நடந்த இச் சம்­ப­வம் குறித்து தக­வல் கிடைத்ததும் அங்கு வந்த காவல்­துறை அதி­கா­ரி­கள், சிறு­வனை அதே நாளில் கைது செய்­த­னர்.

சிறு­வ­னுக்கு முத­லில் காட்­டிய இரண்டு தங்­கச் சங்­கி­லி­க­ளின் எடை 50 கிராம், 80 கிராம் என்றும் சிறு­வன் பறித்­துச் சென்ற இரண்டு சங்­கி­லி­கள் 100 மற்­றும் 130 கிராம் எடை கொண்­டவை என்­றும் திரு டெங் தெரிவித்தார்.

“முத­லில் காட்­டிய ஒரு ஜோடி தங்­கச் சங்­கி­லி­களை மீண்­டும் வைப்­ப­தற்­காக திரும்­பி­னேன். அதற்­குள் சிறு­வன் நகை­களை எடுத்­துக்கொண்டு ஓடி­ய­து­தான் தெரி­யும்,” என்று திரு டெங் சொன்னார். “நகை­கள் திரும்­பக் கிடைத்து விட்­ட­தால் சிறு­வனை நானும் எனது சகோ­த­ர­ரும் மன்­னித்து விட்­டோம். “அவர் இன்­ன­மும் சிறு பையன்தான். தெரியாமல் தவறு செய்துவிட்­டான்,” என்று திரு டெங் கூறி உள்­ளார்.

காவல்­து­றை தொடர்ந்து இந்தச் சம்பவத்தை­ விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!