வயதான நோயாளிகள் தங்கியிருக்கும் காலம் அதிகம்

படுக்கை பற்றாக்குறைக்கான காரணங்கள் மருத்துவமனைகளில் புதிய வசதிகளைத் திறப்பதில் தாமதம்

பொது மருத்­து­வ­ம­னை­களில் நில­வும் படுக்கை நெருக்­க­டிக்கு புதிய மருத்­து­வ­மனை வச­தி­களைத் திறப்­ப­தில் ஏற்­பட்­டுள்ள தாம­த­மும் வய­தான நோயா­ளி­கள் நீண்ட காலம் தங்­கி சிகிச்சை பெறு­வ­தும் கார­ணங்­கள் என்று சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது. கொவிட்-19 தொற்று­நோய்ப் பர­வல் சுகா­தா­ரத் துறை உட்­பட பல துறை­களில் கட்­டு­மா­னத் தாம­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது. மற்­றது, மாறி­வ­ரும் நோயா­ளி­க­ளின் வயது.

2019க்கும் 2022க்கும் இடைப்­பட்ட காலத்­தில், நோயா­ளி­கள் சரா­ச­ரி­யாக 15 விழுக்­காடு அதிக காலம் தங்­கி­யி­ருந்­த­தாக அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார். நாள் அடிப்­ப­டை­யில், இது 6.1 நாள்­க­ளி­லி­ருந்து ஏழு நாள்­க­ளாக உயர்ந்­துள்­ளது.

“நீண்ட காலம் தங்­கி சிகிச்சை பெற­வேண்­டிய சிக்­க­லான பிரச்­சி­னை­கள் உள்ள வய தான நோயா­ளி­களை அதி­கம் பார்க்­கி­றோம். 65 வய­தும் அதற்கு மேற்­பட்ட வய­து­முள்ள நோயா­ளி­க­ளின் விகி­தம் 2019ல் 39 விழுக்­கா­டாக இருந்­தது. இது 2022ல் 43 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது,” என்­றார் அவர்.

இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­மனை (என்­டி­எ­ஃப்­ஜி­எச்), கூ டெக் புவாட் மருத்­து­வ­மனை (கேடி­பி­எச்), சாங்கி பொது மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­றில், ஏப்­ரல் மாதம் மூன்­றா­வது வாரத்­தில் குறைந்­தது ஒரு நாளா­வது, 24 மணி நேரத்­துக்­குள் அனு­ம­திக்­கப்­பட வேண்­டிய நோயா­ளி­களில் பாதி நோயாளி களுக்­கு­க்கூட படுக்கை வழங்­க­மு­டி­யாத நிலை காணப்­பட்­டது.

அத்­த­கை­ய­வர்­கள் படுக்கை கிடைக்­கும்­வரை அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் வைக்­கப்­ப­டு­கிறார்­கள். இருப்­பி­னும், அவர்­களுக்கு உட­ன­டி­யாக சிகிச்சை தொடங்­கப்­பட்­டு­வி­டு­கிறது.

பல பொது மருத்­து­வ­ம­னை­களில் தற்­போ­தைய படுக்கை நெருக்­கடி வெளி­நாட்டு நோயா­ளி­க­ளால் ஏற்­ப­ட­வில்லை. மேலும் இந்த மருத்­து­வ­ம­னை­கள் முக்­கி­ய­மாக உள்­ளூர் நோயா­ளி­களைப் பரா­ம­ரிக்­கின்­றன என்று அமைச்சு உறு­தி­ய­ளித்­தது.

“பொது மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­படும் வெளி­நாட்டு நோயா­ளி­க­ளின் விகி­தம் மிக­வும் குறை­வாக, மொத்த நோயாளி சேர்க்­கை­யில் 0.5 விழுக்­காட்­டுக்­கும் குறை­வா­கவே உள்­ளது,” என்று அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­னார். 2018ல் நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்சு வழங்­கிய புள்­ளி­வி­வ­ரப்­படி, இது 2017ம் ஆண்­டுக்­கான 1.5% அல்­லது 10,900 வெளி­நாட்டு நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யை­வி­டக் குறைவு.

“கேடி­பி­எச், டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­கள் மிக அதிகமான அவ­ச­ர­ சி­கிச்சை தேவைப்­படும் நோயா­ளி­களை நிர்­வ­கிக்­கின்­றன,” என்று அவற்றை நிர்­வ­கிக்­கும் தேசிய ஹெல்த்­கேர் குழு­மத்­தின் மருத்­துவ இயக்­கு­நர் சபைத் தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் லிம் டோக் ஹான் கூறி­னார்.

தேசிய சுகாதார பராமரிப்புக் குழுமம் சேவை வழங்­கும், சிங்­கப்­பூ­ரின் மத்­திய மற்­றும் வடக்­குப் பகு­தி­களில் உள்ள நோயா­ளி­களில் அதி­க­மா­னோர் பொது­வாக வய­தா­ன­வர்­கள் என்­றும் அவர்­க­ளின் சிக்­க­லான நிலை­மை­க­ளுக்கு சிறப்­புக் கவ­னிப்­புத் தேவை என்­றும் அவர் கூறி­னார்.

கிழக்குப் பகுதி மருத்­து­வ­மனை­களை நிர்­வ­கிக்­கும் சிங்­ஹெல்த், வெளி­நாட்­ட­வரோ உள்­ளூர்­வா­சி­களோ சிகிச்சை தேவைப்­படும் எந்த நோயா­ளி­யை­யும் திருப்பி அனுப்­பு­வ­தில்லை என்று கூறி­யது.

“அந்­த வட்­டா­ரத்­தில் உள்ள நோயா­ளி­கள் தங்­கள் சொந்த நாட்­டில் சிகிச்சை கிடைக்­கா­த­போது அல்­லது அவர்­க­ளின் நிலை மிக­வும் சிக்­க­லா­ன­தாக இருக்­கும்­போது நம்­பிக்­கை­யோடு எங்­க­ளி­டம் வரக்­கூ­டும்,” என்று அதன் மருந்து சேவை­களின் துணைக் குழும தலைமை நிர்­வா­கி­யான பேரா­சி­ரி­யர் ஃபாங் கோக் யோங் கூறி­னார்.

எல்லா நாடு­க­ளி­லும் கிடைக்­காத சிறப்பு சேவை­களை சிங்­ஹெல்த் வழங்­கு­கி­றது. உதா­ர­ண­மாக, சிங்­கப்­பூர் பொது மருத்து­வ­ம­னை­யிலுள்ள தீக்­காய மையம் தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் உள்ள ஒரே மையம் என்­றார் அவர்.

மேற்­கில் பொது மருத்து­வ ­ம­னை­களை நடத்­தும் தேசிய பல்­க­லைக்­க­ழக சுகா­தார குழுமம் (என்­யு­எச்­எஸ்), சிங்­கப்­பூ­ரர்­க­ளின் சுகா­தா­ரத் தேவை­களுக்கு முன்னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கிறது என்றும் வெளி­நாட்டு நோயா­ளிகள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு சேவை வழங்­கு­வ­தில் பாதிப்பை ஏற்­படுத்­து­வ­தில்லை என்­றும் கூறியது.

“மருத்­து­வத் தேவை ஏற்­ப­டும்­போது எங்­கள் வாச­லுக்கு வரும் அனை­வ­ரை­யும் கவ­னிக்க வேண்­டிய கடமை எங்­க­ளுக்கு உள்­ளது. எந்த நாட்­டுக்­கா­ர­ராக இருந்­தா­லும் சரி­யான நேரத்­தில் சிகிச்சை வழங்­கு­வது மறுக்­கப்­படாது,” என்று அது குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!