சீனாவில் அமெரிக்க அமைச்சர்; நல்லுறவை நிலைப்படுத்தும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன், சீனா­வுக்கு இரு நாள் பய­ணம் மேற்­கொண்டு இருக்­கி­றார். அவர் நேற்று பெய்­ஜிங்­கில் சீன வெளி­யு­றவு அமைச்­சர் சின் காங்கை சந்­தித்­தார்.

ஐந்­தாண்­டு­க­ளுக்குப் பிறகு அமெ­ரிக்க அமைச்­சர் ஒரு­வ­ரின் சீனப் பய­ணம் இப்­போது இடம்­பெ­று­கிறது.

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான உற­வு­கள் மிக பதற்­ற­மாக இருக்­கின்­றன.

அந்த உறவை நிலைப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதே அமெ­ரிக்க அமைச்­சர் மேற்­கொண்­டுள்ள சீனப் பய­ணத்­தின் நோக்­கம் என அமெ­ரிக்க தரப்­பில் தெரி­விக்­கப்­பட்டது.

திரு பிளிங்­கன் ஐந்து மாதங்­க­ளுக்கு முன்­பாக சீனப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வி­ருந்­தார். ஆனால் அமெ­ரிக்க ஆகாய வெளி­யில் சீனா வேவு பலூனை பறக்­க­விட்­ட­தா­கச் சந்­தே­கம் கிளம்­பி­யதை அடுத்து அந்­தப் பய­ணம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

திரு பிளிங்­கன் வருகை மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய சாத­க­மான எதிர்­பார்ப்­பு­களை அமெ­ரிக்கா குறைத்துக்கொண்டு உள்ளன.

பெரிய அள­வில் முன்­னேற்­றம் எது­வும் ஏற்­படும் என தான் எதிர்­பார்க்­க­வில்லை என அமெ­ரிக்கா தெளி­வு­ப­டுத்தி இருக்­கிறது.

உற­வு­களை நிலைப்­ப­டுத்­த­வும் தக­வல்­ தொடர்பு­க­ளுக்­கான வழி­களை திறந்­து­வி­ட­வும் திரு பிளிங்கன் சீனப் பய­ணம் மேற்­கொண்டுள்ளதாக அமெ­ரிக்க தரப்­பில் தெரி­விக்­கப்­பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!