ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்

தோக்கியோ: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அளிக்கப்படும் நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதாக ஜப்பான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தது.

ஹமாஸ் போராளிகள் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பின் ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சில நாடுகள் கூறியதையடுத்து ஐக்கிய நாட்டு நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பின் ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை எண்ணி ஜப்பான் வருந்துகிறது,” என ஜப்பானிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.

“இது குறித்து யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பு விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்,” என ஜப்பான் அதில் குறிப்பிட்டது.

நிதியுதவி அனுப்புவதை நிறுத்த வேண்டாம் என ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் முடிவை மாற்றிக்கொள்ளும்படி அந்த நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!