முதன்முறையாக டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் கொண்டாடும் உக்ரேன்

கியவ்: ர‌ஷ்யா நடைமுறைப்படுத்திய வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் உக்ரேன் முதன்முறையாக ஜனவரி மாதம் ஏழாம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடவுள்ளது.

பொதுவாக கிறிஸ்துவர்கள் டிசம்பர் 25ல் கிறிஸ்துமசைக் கொண்டாடுவர். அன்றே அப்பண்டிகையைக் கொண்டாட வகைசெய்யும் சட்டத்தை உக்ரேன் ஜூலை மாதம் இயற்றியது.

தங்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றி தங்களுக்கான விடுமுறை நாள்களை அனுசரித்து வாழ உக்ரேனியர்கள் விரும்புவதாக அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார். ர‌ஷ்ய பாரம்பரிய முறைப்படி ஜனவரி ஏழாம் தேதியன்று கிறிஸ்துமசைக் கொண்டாடும் வழக்கத்தை உக்ரேனியர்கள் கைவிட புதிய சட்டம் வழிவகுப்பதாக திரு ஸெலென்ஸ்கி சொன்னார்.

உக்ரேனில் பெரும்பான்மையினர் கிறிஸ்துவர்கள். அந்நாட்டில் அண்மைக் காலம் வரை சமயம் சார்ந்த நடைமுறைகளில் ர‌ஷ்யா அதிகம் தலையிட்டு வந்தது.

உக்ரேனில் ர‌ஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் தாக்கம் இருப்பதைக் காட்டும் அறிகுறிகளை அகற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின்கீழ் சாலைகள், அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டு வருவதும் அடங்கும்.

உக்ரேனின் மரபு சார்ந்த தேவாலயமும் (ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஆஃப் உக்ரேன்) கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை டிசம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது. 2019ஆம் ஆண்டில் முதன்முறையாக பிரார்த்தனை நடத்திய அந்தப் புதிய தேவாலயம் சுயேச்சையாக இயங்குகிறது.

2014ஆம் ஆண்டில் ர‌ஷ்யா, கிரைமியா வட்டாரத்தைத் தன்வசம் கொண்டு வந்தது. அதோடு, உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ர‌ஷ்யா ஆதரவளித்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து உக்ரேனின் மரபு சார்ந்த தேவாலயம், ர‌ஷ்யாவின் மரபு சார்ந்த தேவாலயத்துடனான தொடர்புகளை அதிகாரபூர்வமாகத் துண்டித்துக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!