ஆயுதங்களை அனுப்புங்கள்: ஸெலென்ஸ்கி வேண்டுகோள்

கியவ்: தங்களுக்குக் கிடைக்கவேண்டிய ஆயுதங்கள் கிடைக்காமல் இருப்பதால் போரில் ர‌ஷ்யாவின் கை ஓங்குவதாக உக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கி மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கூறினார்.

அந்தக் குறைபாட்டை ஈடுகட்டுமாறு சனிக்கிழமையன்று (17 பிப்ரவரி) நடைபெற்ற மாநாட்டில் அவர் உக்ரேனின் பங்காளி நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கா, உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அந்த ஆயுதங்களை உக்ரேன் பெறுவது மிக முக்கியமானது என்றார் திரு ஸெலென்ஸ்கி.

உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அரசதந்திரிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோர் மாநாட்டில் திரு ஸெலென்ஸ்கிக்கு எழுந்து நின்று கைத்தட்டினர். மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு வழங்கியிருக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திரு ஸெலென்ஸ்கி, மேலும் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

உக்ரேன் மீது ர‌ஷ்யா படையெடுத்து கிட்டத்தட்ட ஈராண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உக்ரேன்-ர‌ஷ்யா போர் முக்கியக் கட்டத்தில் உள்ளது. அப்படியிருக்கையில் கிழக்கு உக்ரேனிய நகரான அத்வீவ்காவிலிருந்து உக்ரேனியப் படைகள் பின்வாங்க வேண்டியிருந்ததைத் தொடர்ந்து திரு ஸெலென்ஸ்கி இவ்வாறு பேசினார்.

போதுமான ஆயுதங்கள் இல்லாமல் உக்ரேன் பெரிதும் சிரமப்படுகிறது. அதற்கு ராணுவ ரீதியாக உதவுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பல மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை.

“உக்ரேனுக்குக் கிடைக்கவேண்டிய ஆயுதங்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக பீரங்கிகள், தொலைதூரத் தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதங்கள் ஆகியவற்றில் தட்டுப்பாடு உள்ளது.

“அது, இப்போரின் தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு செயல்பட திரு புட்டினுக்கு சாதகமாக அமைகிறது,” என்று திரு ஸெலென்ஸ்கி கூறினார்.

ராணுவ ரீதியாக உக்ரேனுக்குக் கூடுதல் உதவி வழங்குவதே பங்காளி நாடுகள் மேற்கொள்ளக்கூடிய முக்கியமான நடவடிக்கையாகும் என்று அவர் சுட்டினார்.

“உங்கள் பீரங்கிக் குண்டுகள் 20 கிலோமீட்டர் தூரம் செல்லும் வேளையில் ர‌ஷ்ய பீரங்கிக் குண்டுகள் 40 கிலோமீட்டர் தூரத்துக்குச் சென்றால் எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று திரு ஸெலென்ஸ்கி சொன்னார்.

உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம் குடியரசுக் கட்சியினர் என்று கூறப்படுகிறது.

குடியரசுக் கட்சியின் அச்செயலை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சாடினார். திரு ஸெலென்ஸ்கியுடனான இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு அவர் பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!