ஒரு நல்ல வழக்கறிஞர் நல்ல மனிதராக இருக்கவேண்டியது தேவையான ஒன்று

புதிய சட்ட பட்­ட­தா­ரி­களும் பல ஆண்­டு­கா­லம் பெயர் பெற்ற வழக்­க­றி­ஞர்­களும் சம்பந்­தப்­பட்ட தவ­றான நடத்தை பற்­றிய புகார்­கள் தொல்லை தரு­ப­வை­யாக இருக்­கின்­றன.

வழக்­க­றி­ஞர் என்­ப­வர் நல்ல நிபுணத்­துவ ஞானம், திறமை எல்லாவற்­றுக்­கும் மேலாக நம்­பிக்கை மிக்­க­வராக இருக்க வேண்டும் என்று பொது­வான கருத்து நில­வு­வதே இதற்கான கார­ணம்.

ஆகை­யால் நீதி­மன்ற அதி­காரி என்ற முறை­யில் வழக்­க­றி­ஞர் உய­ரிய நன்­ன­டத்­தை­யைக் கொண்டு இருக்க வேண்­டும் என்­பதே எதிர்­பார்ப்பு.

அவர்கள் தங்­கள் நிய­திகளில் இருந்து தவ­றும் பட்­சத்­தில் வழக்கறிஞர்கள் சங்கமும் நீதி­மன்­ற­மும் அவர்­களுக்­குத் தண்­டனை விதிக்­கும் நிலை ஏற்­பட்டு­வி­டும்.

நிபு­ணத்­துவ தரங்­களை, நிய­தி­களை வழக்­க­றி­ஞர்­கள் மீறும் போக்கு குறிப்­பிடத்­தக்க அள­வுக்கு அதி­க­ரித்துள்ளது என்று சிங்­கப்­பூ­ரின் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன், கடந்த ஜன­வ­ரி­யில் சட்ட ஆண்­டைத் தொடங்­கி­வைத்­த­போது கவலை தெரி­வித்­தார்.

சட்­டத் தொழி­லுக்கு என்றே வழி­வழி­யாக நடப்­பில் இருந்­து­வ­ரும் நன்­னெ­றி­களைப் பேணி வளர்க்க இந்­தத் தொழில்­துறை தனக்­குத்­தானே முய­ல­வில்லை எனில் நிய­தி­கள், நிபு­ணத்­துவ தரங்­கள் குறை­வது மேலும் மோச­மா­கி­வி­டும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

இப்­படி அச்­சம் தெரி­விக்­கப்­பட்டு இருப்­பது முத­லும் அல்ல; முடி­வும் அல்ல; வழக்­க­றி­ஞர்­கள் தங்­களை கௌரவ­மான தொழி­லர்­கள் என்று எப்படி பார்க்­கி­றார்­கள் என்­ப­தில் கணி­சமான மாற்­றங்­கள் இடம்­பெற்­றா­லொழிய இது இடம்­பெ­றவே செய்­யும்.

வழக்­க­றி­ஞ­ராக, சொலி­சி­ட­ராக தொழில் நடத்த அனு­ம­திக்­கப்­ப­டு­வதற்கு முன் வழக்­க­றி­ஞர்­கள் அனைவரும் சத்­தி­யப் பிர­மா­ணம் எடுத்­துக்கொள்­ள­வேண்­டும். உண்மை, நேர்­மை­யு­டன் நடந்­து­கொள்­வ­தாக அவர்­கள் அந்­தப் பிர­மா­ணத்­தில் உறுதி தெரி­விப்­பார்­கள்.

அந்த உறு­தி­யா­னது, இயற்­கை யிலேயே அமைந்த ஒரு நன்­னெ­றி­யாக இருக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்று உயர் நீதி­மன்­றம் தெரி­வித்துள்ளது.

ஒரு வழக்­க­றி­ஞ­ரின் நடத்தை, ஒரு மனி­தர் என்ற முறை­யில் அவ­ருக்கு அல்­லது அவ­ரு­டைய தொழி­லுக்கு நேர்மை­யற்­ற­தாக இருந்­தி­ருக்­கு­மே­யானால் அவர் சட்­டத் தொழில் சட்­டத்­தின்­கீழ் ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கைக்கு ஆளா­கக்­கூ­டிய நிலை வர­லாம்.

இருந்­தா­லும்­கூட நிபு­ணத்­துவ தரங்கள் மீறப்­ப­டு­வ­தற்கு என்ன கார­ணம்? வழக்­க­றி­ஞர்­கள், குடி­மக்­கள் என்ற முறையில் நாம் யார் என்­பது பற்றி நமது நன்­னெறிகளால் தெள்ளத்­தெ­ளி­வாக வரை­ய­றுக்­கப்­படாமல் இருப்பது அநே­க­மாக கார­ண­மாக இருக்­க­லாம்.

ஒரு தொழி­லின் தேவை­கள், நலன்­களோடு தொழிலை லாப­க­ர­மாக நடத்த வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் சட்­டத் தொழி­லி­டம் இப்­போது நன்­னெறி சவால்­க­ளைச் சமா­ளிக்­கும் ஆற்­றல் அல்­லது விருப்­பம் குறை­வாக இருக்­கக்­கூ­டும்.

இந்­தத்­ தொ­ழி­லின் நன்­னெறி நியதி­கள் சரி­வதை எப்­படி தடுக்­க­லாம்?

சட்­டத் தொழி­லுக்­கான நன்­னெறி களை­யும் தார்­மீக நிய­தி­க­ளை­யும் மீண்டும் உரு­வாக்­கும் நோக்­கத்­தில் உத்தி ஒன்றை உரு­வாக்­கும்­படி ஒரு குழுவை தலைமை நீதி­பதி பணித்தார்.

உண்­மை­யிலேயே அதன் பணி சிரம மானது. எங்­கி­ருந்து அவர்­கள் தொடங்­கு­வர்? சட்­டத்­தொ­ழிலை ஏற்­கெ­னவே சட்டம், நடத்தை விதி­கள், உள்­ளிட்ட பல விதி­கள் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன. ஆகை­யால் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு நடத்தை விதி­களை அதி­கப்­ப­டுத்­தலாம் என்ற யோசனை பலன்­த­ரா­து போகலாம்.

வழக்கறிஞர்கள் சங்கமும் சம்­பந்தப்­பட்ட தரப்பு­களும் மேலும் விழிப்­பு­டன் இருந்து மேலும்­ க­டு­மை­யான நட­வ­டிக்­கை­களை அம­லாக்­கி­னால் தவ­றான நடத்­தை­களைத் தடுப்­ப­தற்கு அநே­கமாக உதவி கிடைக்­க­லாம். நன்­னெறி­கள் சரி­வ­தைத் தடுக்க தனிப்­பட்­ட­வர்­களும் சரி, ஒட்டுமொத்­த­மாக இந்­தத் தொழில்­து­றை­யும் சரி உட­ன­டி­யாக ஏதா­வது செய்­தா­க­வேண்­டும்.

அடுத்­த­தாக, பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் சட்­டப்­ படிப்­பி­லும் அதற்கு அப்­பாலும் நடைமுறைச் சட்ட நிய­தி­களைப் போதிப்பதற்­கான நம் முயற்­சி­கள் இரு மடங்­காக வேண்­டிய தேவை உள்ளது.

வழக்­க­றி­ஞ­ரின் பெரும்­பா­லான பணி களும் இந்­தத் தொழி­லைப் பற்­றிய பொதுவான எண்­ண­மும் நம்­பிக்கை, நேர்மை, நியா­யத்­தையே சார்ந்து இருக்­கிறது என்று நாம் கரு­து­கி­றோம் என்­பதால் நன்­னெறி நிய­தி­க­ளைக் கற்­றுக்­கொள்­வது முக்­கி­ய­மான ஒன்று.

அதோடு, பல்­க­லைக்­க­ழ­கங்­கள், வழக்கறிஞர்கள் சங்கம், சட்­டப் பயிலகம் ஆகியவை நடத்­தும் உரை நிகழ்ச்­சி­கள், ஆய்வ­ரங்­கு­களில் நன்னெ­றி­கள் தொடர்ந்து வலியுறுத்­தப்­பட வேண்டிய தேவை­யும் இருக்­கிறது. நன்­னெறி என்பது வாழ்­நாள் கற்­றல் நடை­முறையாகப் புரிந்­து­கொள்­ளப்­பட வேண்­டும்.

நம்­மி­டத்­தி­லும் நம் பொறுப்­பில் இருப்­போ­ரி­டத்­தி­லும் சரி­யான நல்ல நிய­தி­க­ளைப் பேணி வளர்க்­க­வேண்டும் என்­ப­தை­யும் புரிந்­து­கொள்­ள­வேண்­டும்.

சட்­டத்­தொ­ழிலை நடத்த அனு மதிக்­கப்­ப­டும்­போது வழக்­க­றி­ஞர்­கள் கொடுக்­கும் உறு­தி­மொ­ழியை ஒவ்­வோர் ஆண்­டும் அவர்­கள் தொழில் சான்­றி­த­ழைப் புதுப்­பிக்­கும்­போ­தும் மீண்­டும் உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யதை தேவை­யான ஒன்­றாக வேண்­டும்.

கௌரவமான ஒரு­ தொ­ழிலை நடத்து­வோர் என்ற முறை­யில் தங்­களி­டம் இருந்து தொடர்ந்து என்ன எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என்­பதை வழக்­கறிஞர்­களுக்கு இது நினை­வூட்­டும்.

சட்­டத் தொழில்­துறை தான் சேவை­யாற்­றும் சமூ­கத்­திற்­கான தனது இலக்கு­கள், வேலை­களை மீண்­டும் ஆராய்­வ­தற்கு இது தக்க தரு­ணம்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் நம் மாண­வர்­க­ளிடையே நாம் வலி­யு­றுத்­து­வ­தைப் போல் நல்ல ஒரு வழக்­க­றி­ஞர் நல்ல ஒரு மனி­த­ராகவும் இருக்க முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!