தகவல் தொழில்நுட்ப ஆற்றல் என்றும் தேவைப்படும் ஆக்கசக்தி

முரசொலி

உல­கம் இனி­மேல் தொழில்­நுட்­பம் இன்றி செவ்வனே செயல்­பட இய­லாத நிலை ஏற்­பட்­டு­விட்­டது. பொரு­ளி­ய­லில் மட்டுமன்றி மக்­க­ளின் அன்­றாட வாழ்க்­கை­யி­லும் கணி­னித் தக­வல் தொழில்­நுட்­பம் எங்­கும் எதிலும் செலுத்­தும் ஆதிக்­கம், நாளொரு மேனி­யும் பொழு­தொரு வண்­ண­மு­மாக நாள்­தோ­றும் கூடி வரு­கிறது.

அந்­தத் துறை­யில் புத்­தாக்­கங்­களும் புதுப்­புது நுட்­பங்­களும் இடம்­பெ­றாத நாள் இல்லை என்று சொல்­லும் அள­வுக்கு நிலவரம் இருக்­கிறது.

எதிர்­கா­லத்­தில் தொழில்­நுட்­பங்­க­ளின் பங்கு இன்­னும் வேகத்­தில் அதி­க­ரிக்­குமே தவிர குறை­யாது என்­பது திண்­ணம்.

தக­வல்­தொ­ழில்­நுட்­பத் தேர்ச்சி என்­பது இடை­வி­டா­மல் மேம்­ப­டுத்­திக்­கொண்டே வர­வேண்­டிய முக்கியமான ஒன்று என்­பது எல்­லா­ருமே உணர வேண்­டியது. அது காலத்­தின் கட்­டா­ய­­ம்.

இதை நிறு­வ­னங்­களும் நன்றாக உணர்ந்­து கொண்­டுள்­ளன. தொழில்­நுட்­பத்தை விட்­டால் நிகழ்­கா­ல­மும் எதிர்­கா­ல­மும் நமக்கு இல்லை என்ற நம்­பிக்­கை­யு­டன் அவை செயல்­ப­டு­கின்­றன.

என்­றா­லும் பல்­வேறு உலக நில­வ­ரங்­கள் காரண­மாக உல­க­ளா­விய அள­வில் இந்­தத் தொழில்­துறை இப்­போது அவ்­வ­ளவு நல்ல நிலை­யில் இல்லை. கொஞ்சம் மெதுவாகத்­தான் போகிறது.

கொரோனா தலைவிரித்து ஆடி­ய­போதும் மற்ற துறை ஊழி­யர்­களை­விட வேலையைப் பொறுத்­த­வரை இந்­தத் துறை­யி­னர் பாதிக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் வேலை பார்க்­கும் பாணி மாறி­யது. வீட்­டில் இருந்தே வேலை பார்க்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அந்தக் காலத்­தி­லும்­, உலக அள­வில் பல நிறு­வ­னங்­கள் எதிர்­கா­லத்தைக் கணித்து தங்­க­ளுக்கு ஊழி­யர் தேவை என்று வேலைக்கு ஆள்களைச் சேர்த்­தன.

கணினி வழி நடக்­கும் வர்த்­த­க­மும் கூடியது. அதைச் சமா­ளிக்­க­வும் அதிக ஊழி­யர்­கள் தேவைப்­பட்­ட­னர்.

இந்த நிலை­யில், கொரோனா ஒரு வழி­யாக ஒடுங்­கி­யது. ஆனால் கொவிட்-19 காலத்­தில் படுத்த உல­கப் பொரு­ளி­யல் எதிர்­பார்க்­கப்­பட்­ட அளவுக்குக் கிரு­மித்­தொற்­றுக்­குப் பிறகு வேகமாக தலைதூக்­க­வில்லை. அப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ­லில் உக்­ரேன் போரும் இடம்­பெற்­று­விட்­டது.

இதனால் பல உலக நிறு­வனங்­களுக்­குச் சென்ற ஆண்டு சரி­யில்­லாத ஆண்­டா­கி­விட்­டது. வரு­மா­னம் குறைந்­து­விட்­டது. இந்த ஆண்­டும் நல்ல ஆண்­டாக இருக்­கும்­போல் தெரி­ய­வில்லை.

இதன் கார­ண­மாக பெரும் பெரும் உல­கத் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், ஊழி­யர்­களைக் குறைக்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்டு அது இன்­ன­மும்­கூட நடந்து வரு­கிறது.

பொரு­ளி­யல் சரி­யில்லை. வட்டி விகி­தம் அதி­க­ரிப்பு கார­ண­மாக லாபத்­தைப் பார்க்க முடி­யா­மல், செல­வைக் குறைக்க முடிவு செய்து, அத்தகைய நிறு­வ­னங்­கள் ஆயி­ரக் கணக்­கில் ஊழி­யர்­களை வீட்­டுக்கு அனுப்­பி­விட்­டன.

ஆனா­லும் இந்த நிலை தற்­கா­லி­க­மா­னது தான் என்று கணிக்­கப்­பட்டு இருக்­கிறது. தகவல்­ தொழில்­நுட்­பத் துறை இப்­போது எதிர்­நோக்­கும் பிரச்­சினை, நில­வ­ரங்­க­ளுக்கு ஏற்ப அப்­போதைக்கு அப்­போது மாறி­மாறி வரும் ஒன்­றே.

அந்­தத் துறை அடிப்­படையில் மிக வலு­வாக இருக்­கிறது என்­ப­தில் ஐய­மில்லை.

கணினி மென்­பொ­ருள், தக­வல் தொழில்­நுட்­பச் சேவை­கள் கார­ண­மாக உலக தக­வல்­தொழில்­நுட்­பச் செல­வி­னம் சென்ற ஆண்­டை­விட இந்த ஆண்­டில் 2.4% கூடும் என்று ஓர் ஆய்வு தெரி­விக்­கிறது. இது மட்­டு­மல்ல, தொழில்­நுட்­பப் புத்­தாக்­கங்­கள்­தான் பொரு­ளி­யலை உந்­தித் தள்­ளக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான இயந்­தி­ர­மாக இனி­மே­லும் தொடர்ந்து இருந்­து­வ­ரும்.

ஊழி­யர் வளத்தை மிக­வும் விவே­க­மாக, செம்மை­யா­கப் பயன்­ப­டுத்­திக்கொண்டு சமூகத்தில் செல்­வச் செழிப்பைக் அதிகபட்­ச­மாக்க தொழில்­நுட்­பப் புத்­தாக்­கங்­கள் உதவி வருகின்­றன. உலக அள­வில் தக­வல் தொழில்­நுட்­பத் துறை இப்­படி இருக்­கை­யில், சிங்­கப்­பூ­ரில் நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. சிங்­கப்­பூ­ரில் தொழில்­நுட்­பத் துறைக்­குச் சென்ற ஆண்டு நல்ல, அரு­மை­யான ஆண்­டாக இருந்­தது.

கணி­னித் தொழில்­நுட்­பத்­தைத் தழு­விக்­கொள்ள­வில்லை எனில் எதிர்­கா­லம் இல்லை என்­பதை உணர்ந்­தி­ருக்­கும் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள், இந்­தத் துறை­யைச் சேர்ந்த தலை­சி­றந்த வல்­லு­நர்­களை வேலை­யில் சேர்த்­தன.

மனி­த­வள அமைச்சு, வருடாந்திர வேலை வாய்ப்­புகள் பற்­றிய அறிக்கை 2022ஐ வெளி­யிட்­டது. சிங்­கப்­பூர் தக­வல்­தொ­ழில்­நுட்ப நிறு­வனங்­கள், ஆற்­றல்­மிக்க ஊழி­யர்களைச் சேர்க்க திக்­கு­முக்­கா­டு­கின்­றன என்­பது அந்த அறிக்கை மூலம் தெரிய வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் தக­வல், தொடர்புத் துறை­யில் கிடைத்த அனைத்து வேலைகளை­யும் பார்க்­கும்­போது, அவற்­றில் 10ல் கிட்­டத்­தட்ட ஏழு வேலை­கள் புதி­யவையாக இருந்­தன. இதர துறை­களில் இந்த நிலை இல்லை. இது மூன்­றா­வது ஆண்­டா­கத் தொட­ரும் ஒரு நில­வ­ர­மாக இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் தக­வல்­தொ­ழில்­நுட்­பத் துறை உரு­மாறி இருக்­கிறது என்­ப­தையே இது காட்­டு­கிறது.

புதிய புதிய வேலை­க­ளுக்­குப் புதிய புதிய தேர்ச்­சி­கள் தேவைப்­ப­டு­கின்­றன. இங்கு செயல்­படும் தக­வல்­தொ­ழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் இதை சரி­யாக உணர்ந்­து­கொண்­டுள்­ளன.

நிறுவனங்­கள் அதிநவீன திட்­டத்­தைத் தொடங்க முடி­வு­ எடுக்கையில், அதற்­குத் தோதான தேர்ச்­சி­மிக்க ஊழி­யர்­க­ளை உடனே பெற­வேண்­டும் என்­பது மிக முக்­கி­யம். இது­தான் இதில் பிரச்சினை. தேவைப்­ப­டும் தேர்ச்­சி­களு­டன்­கூ­டிய ஊழியர்­களைப் போதிய என்­ணிக்­கை­யில் தயார் செய்­வ­தற்­குள் வாய்ப்பு வேக­மாக நழுவிக் கடந்து போய்­வி­டக்­கூ­டிய ஆபத்து உண்டு.

வாய்ப்பு இருந்­தும் அதற்கு ஏற்ற ஊழி­யர் வளம் இல்லை எனில் பலன் இன்றிப் போய்­விடும் என்­ப­தால் சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் கல்வி, பயிற்சி நிறுவனங்­கள் இத்­த­கைய ஒரு நிலை வரா­மல் பார்த்­துக்கொள்­ள­வேண்­டும்.

அவை பல­துறை ஆற்­றல்களுடன், நிகழ்­காலத்­திற்கு, வருங்­கா­லத்­திற்­குப் பொருத்­த­மா­ன­ தொழில்­நுட்ப ஊழி­யர்­களை உட­னுக்­கு­டன் தொடர்ந்து உரு­வாக்கி எதிர்­கா­லத்தை உறுதிப்­படுத்த வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!