மக்கள்தொகையில் முதலிடம்: இந்தியத் துணைக்கண்டத்தின் சாதகமும் சவால்களும்

ஐக்­கிய நாடு­கள் மக்­கள்­தொகை நிதியம், கடந்த புதன்­கி­ழமை உலக மக்கள்­தொகை அறிக்கை 2023ஐ வெளி­யிட்­டது. அதன்­படி, உல­கில் 8.045 பில்­லி­யன் மக்­கள் வசிக்­கி­றார்கள் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

உலக மக்­களில் 65 விழுக்காட்டி னருக்கு வயது 15 முதல் 64 வரை. 10 முதல் 24 வரை வய­துள்­ள­வர்­கள் 2%. உல­கில் வாழ்­வோ­ரில் 100 பேரில் பத்து பேருக்கு வயது 65க்கும் அதி­கம் என்று அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

அந்த அறிக்கை, எதிர்­பார்க்­கப்­பட்ட மிக முக்­கி­ய­மான ஒரு தக­வ­லை­யும் தெரி­வித்­துள்­ளது. அதா­வது, இந்­தியா இன்­னும் ஓரிரு மாதங்­களில் மக்­கள்­தொ­கை­யில் சீனாவை விஞ்­சி­வி­டும் என்று அது தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வின் மக்­கள்­தொகை இந்த ஆண்­டின் மத்­தி­யில் 1.428 பில்­லி­ய­னாக உய­ரும். சீனா­வில் 1.425 பில்­லி­யன் மக்­கள் வசிப்­பார்­கள். சீனாவைவிட இந்­தி­யா­வில் சுமார் 3 மில்­லி­யன் மக்கள் அதி­க­மாக இருப்­பார்­கள்.

அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள், பிறப்பு, இறப்பு, அனைத்­து­லக குடி­யேற்­றம் முதலான பல­வற்­றின் அடிப்­ப­டை­யில் ஐநா அறிக்கை உரு­வாக்­கப்­ப­டு­கிறது.

என்­றா­லும்­கூட, ஒரு நாட்­டின் உண்மை­யான மக்­கள்தொகை எவ்வளவு என்­பது அந்த நாடு நடத்­தும் மக்­கள்தொகை கணக்­கெ­டுப்­பின் மூல­மா­கவே நிச்­ச­யிக்­கப்­படும்.

இந்­தி­யா­வில் 1872ஆம் ஆண்டில் இருந்து மக்­கள்தொகை கணக்­கெ­டுப்பு பத்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடத்­தப்­பட்டு வந்­துள்­ளது.

கடை­சி­யாக, 2011 ஆம் ஆண்டு கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. இந்­தி­யா­வில் 1.2 பில்­லி­யன் மக்­கள் வசிப்­ப­தாக அது கூறி­யது. பிறகு 2021ஆம் ஆண்டில் நடக்க இருந்த கணக்­கெடுப்பு கொரோனா பாதிப்பு கார­ண­மாக நடத்­தப்­ப­ட­வில்லை.

மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பை நடத்த குறைந்­த­பட்­சம் ஈராண்டு அவகாசம் தேவை. அடுத்த ஆண்டு தேர்­தல் ஆண்டு என்­ப­தால் இந்­தியா அடுத்த மக்­கள்தொகை கணக்­கெடுப்பை எப்­போது நடத்­தும் என்­பது உறு­தி­யா­கத் தெரி­ய­வில்லை.

இந்த நிலை­யில், உலக அமைப்பின் தக­வல்களை வைத்­துப் பார்த்­தால் இந்தி­யா­வின் மக்­கள் தொகை 2050வது ஆண்­டில் 1.67 பில்­லி­ய­னாக உயர்ந்து பிறகு 2100ஆம் ஆண்டு வாக்­கில் 1.54 பில்­லி­ய­னாக நிலைப்­படும் என்று­தெரி­கிறது. வரும் 2064ஆம் ஆண்டில் இந்­தி­யா­வில் உச்­ச­மாக 1.7 பில்லி­யன் மக்­கள் வசிப்­பார்­கள் என்­பது உலக அமைப்­பின் இப்­போ­தைய மதிப்­பீடு.

இந்­தி­யா­வில் இப்­போது வசிக்­கும் மொத்த மக்­களில் 68 விழுக்­காட்­டி­னர் 15க்கும் 64க்கும் இடைப்­பட்ட வய­துள்ள­வர்­க­ளாக இருப்­பார்­கள். இவர்­கள் வேலை பார்க்­கும் பிரி­வி­னர் என்­பது மிக­வும் குறிப்­பி­டத்­தக்­கது.

மக்­கள்தொகை­யில் கால்­வாசி பேருக்கு வயது 14 வரை இருக்­கும். 18 விழுக்­காட்­டி­னர் 10 வயது முதல் 19 வயது வரைப்­பட்­ட­வர்­க­ளா­க­வும் வெறும் 7 விழுக்­காட்­டினரே 65க்கும் அதிக வய­துள்­ள­வர்­க­ளா­க­வும் இருப்­பார்­கள் என்று ஐநா மதிப்­பி­டு­கிறது.

இந்­தியா, ஆசி­யக் கண்­டத்­தில் அமைந்­துள்­ளது என்­றா­லும் அந்த நாடே ஒரு துணைக் கண்­டம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒரு கண்­டத்­திற்­கு­உரிய அத்­தனை தன்­மை­களும் இந்­தியா­வி­டம் இருக்­கின்­றன.

கிழக்கே பாலை­வ­னம், மேற்கே உலகி­லேயே அதிக மழை பொழியும் சிர­பூஞ்சி, வடக்கே இம­ய­மலை, தெற்கே தாழ்ந்த பீட­பூமி என்று பல அம்­சங்­களை­யும் உள்­ள­டக்­கிய இந்­தியா, தொன்­று­தொட்டே மனி­த­வ­ளத்தை மாபெ­ரும் சக்­தி­யா­கக் கொண்­டது.

மக்­கள்­தொகை அதி­கம் என்­றா­லும் இந்­தி­யா­வில் மக்­கள்­தொகை வளர்ச்சி வேகம் குறைந்து வரு­வ­தாக ஐநா குறிப்­பி­டு­கிறது. இந்­தியா தன் மனித வளத்தை எப்­படி விவேக­மாகப் பயன்­படுத்­திக்கொள்­ளப்­போ­கிறது என்­ப­தில்­தான் அதன் வெற்றி இருப்­ப­தாக வல்­லு­நர்­கள் கூறு­கி­றார்­கள். இந்­தி­யா­வின் 1.4 பில்­லி­யன் மக்­களும் அதற்கு 1.4 பில்லியன் வாய்ப்­பாக இருப்­பார்­கள் என்று கூட தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

உலக அள­வு­டன் ஒப்­பி­டும்­போது இந்­தி­யா­வில்­தான் இளை­யர்­கள் வளம் அதி­க­மாக இருக்­கும். முதி­ய­வர்­களும் மிகக் குறை­வாக இருப்­பார்­கள். ஆகை­யால், ஆத­ரிக்க வேண்­டி­ய­வர்­க­ளை­விட ஆத­ரிப்­ப­வர்­கள் அதி­க­மாக இருக்­கக்­கூ­டிய மிகப்பெரிய அனு­கூ­லம் இந்­தி­யா­விற்கு இருக்­கும்.

ஊழி­யர்­கள் அப­ரி­மி­த­மாக இருப்­பார்­கள். வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் இந்­தி­யா­வின் உற்­பத்­தித்துறை வாய்ப்பு வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள அதிக முத­லீ­டு­க­ளைச் செய்­யும்.

உள்­நாட்­டுப் பய­னீடு கிடு­கி­டு­வென அதி­க­ரிக்­கும் என்­ப­தால் உல­க­ள­வில் ஏற்­ப­டக்­கூ­டிய அதிர்­வ­லை­களை இந்­தியா சமா­ளிக்க அது பேரு­த­வி­யாக இருக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

உல­கின் பல நாடு­களில் நில­வரங்கள் வேறு­பட்டு இருக்­கின்­றன. இளை­யோ­ரின் எண்­ணிக்­கை­யை­விட முதி­யோர் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரிக்­கிறது.

இந்த நிலை­யில், அத்­த­கைய நாடு­களுக்­கும் உத­வக்­கூ­டிய பெரும் தொழிலா­ளர் வளத்­தை­யும் இந்­தியா கொண்­டி­ருக்­கும்.

இந்­தியா, வரும் 2030ல் ஜெர்­மனி, ஜப்­பான் ஆகிய நாடு­களை விஞ்சி உல­கின் ஆகப் பெரிய மூன்­றா­வது பொரு­ளி­யல் நாடா­கத் திக­ழும். அதன் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி சரா­ச­ரி­யாக 6.3% ஆக இருக்­கும் என்­றெல்­லாம் கணிக்­கப்­பட்டு இருக்­கிறது.

இப்­போதே அத­னு­டைய பொரு­ளி­யல் 7 விழுக்­காட்டு வளர்ச்சி அள­வுக்கு வேக­மாக விரி­வ­டைந்து வரு­கிறது.

இந்­தி­ய மக்­க­ளின் சரா­சரி வயது 28.4 ஆண்­டு­கள். இளை­யர்­கள் அதி­க­மாக இருப்­ப­தால் அவர்­கள் தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளுக்கு ஈடு­கொடுத்து உட­னுக்­கு­டன் வேக­மாக மாறிக்­கொள்­வர் என்றும் நம்­பப்­ப­டு­கிறது.

மக்­கள்­தொகை பெருக்­கத்தை இந்தியா திறம்­பட கையாண்­டால் மாபெரும் பொரு­ளி­யல் சக்­தி­யாக இந்தியா உரு­வெ­டுக்­கும். இதைச் சாதிக்க இந்­தியா அடிப்­படை வச­தி­கள், வேலை வாய்ப்­பு­கள், உற்­பத்தி பெருக்­கம் உள்­ளிட்ட இமா­லய சவால்­க­ளைச் சமா­ளிக்க வேண்டி இருக்­கும்.

இவற்றை எல்­லாம் வெற்­றி­க­ர­மான முறை­யில் செய்து முடித்து மக்­கள் தொகையை மாபெ­ரும் ஆக்க­கரமான சக்­தி­யாக இந்­தியா பயன்­படுத்திக் கொள்­ளும் என்று நம்­பு­வோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!