காலச்சூழல் மாற்றங்களோடு மாறிவரும் சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களின் விருப்பங்களும்

ஏறத்­தாழ 21 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் பிப்­ர­வரி 2002ஆம் ஆண்­டில், அப்­போ­தைய பிர­த­மர் கோ சோக் டோங் தந்த உந்­து­த­லால் ‘சிங்­கப்­பூர் உரு­மாற்­றம்’ என்ற செயற்­குழு தொடங்­கப்­பட்­டது.

பொரு­ளி­யல் வளத்தை மட்­டும் பிர­தான இலக்­காக வைத்­துக்­கொள்­ளா­மல் கலை, விளை­யாட்டு, சமூக நலன் போன்ற மற்ற அம்­சங்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ரர்­கள் முக்­கி­ய­மா­ன­வை­யா­கக் கரு­த­வேண்­டும் என்­ப­தைச் சாதிக்க அந்­தக் குழு முற்­பட்­டது.

அந்த நேரத்­தில் ‘5சிஸ்’ (5Cs) என்று அறி­யப்­படும் வாழ்க்­கைத்­தொ­ழில், கூட்டு­ரிமை வீட்­டில் குடி­யி­ருப்பு, கடன் அட்டை, கார், மன­ம­கிழ் மன்ற உறுப்­பி­யம் ஆகி­ய­வை சிங்கப்பூரர்களின் பிர­பல விருப்பங்களாக இருந்­தன.

இப்போது ‘5சிஸ்’ பற்­றிய பேச்சு மறைந்­து­விட்­டது. அத­னால் அந்தச்­செயற்­குழு நோக்­கத்­தைச் சாதித்­தது என்று கூற­லாமா? அது தன் இலக்கை அடைந்­து­விட்­டதா?

வாழ்­வா­தா­ரம், நடை­மு­றை­கள் காலத்­தோடு மாற சிங்­கப்­பூ­ரர்­க­ளின் இலக்­கு­களும் புது பரி­மா­ணங்­களை எடுத்­துள்­ளன. வாழ்க்கைச் சூழல் மாறி விலை­வா­சி­யும் கடந்த ஆண்­டு­களில் உயர்ந்து உள்­ளது. இத­னால் மக்­க­ளின் இலக்­கு­களும் திசை மாறி­யுள்­ளன.

ரஷ்யா-உக்­ரேன் போரால் ஏற்­படும் பண­வீக்­கம் குறிப்­பாக அடி­மட்ட, நடுத்தர குடும்­பங்­க­ளைப் பாதிக்­கும் என்று நாட­ாளு­மன்­றத்தில் ஏப்­ரல் மாதம் பேசிய பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­னார். அமெ­ரிக்கா-சீனா நாடு­க­ளுக்கு இடை­யி­லான பூசல்­களும் அனைத்­துலக வர்த்­தகக் கட்­ட­மைப்பு முறி­வ­தும் சிங்­கப்­பூ­ரைப் பாதிக்­கும் என்று திரு லீ மேலும் விளக்கினார்.

சிங்­கப்­பூ­ரின் பொருள், சேவை வரி அதி­க­ரிப்­பை­யும் கவ­னத்­தில் கொள்ள­வேண்­டும். இவ்­வாண்டு 8 விழுக்­காடாக மாறி, அடுத்த ஆண்டு 9 விழுக்­கா­டாக உய­ரும் வரி, விலை­வாசியை மேலும் அதி­க­ரிக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

உட­னடி எதிர்­கா­லத்­திற்கு அர­சாங்க திட்­டங்­கள் உத­வி­னா­லும் காலப்­போக்­கில் சமு­தாய சூழ­லுக்கு ஏற்ப நாம் நம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டியது அவ­சி­ய­மா­கி­வி­டும்.

இதன் பின்­ன­ணி­யில் ‘5சிஸ்’ நமக்கு எவ்­வ­ளவு பொருந்­தும்?

கார் வைத்­தி­ருப்­பது இன்று வரையி­லும் ஒரு­வ­ரின் சமு­தாய தகுதி நிலை­யைக் குறிக்­கும் ஒன்றாகக் கரு­தப்­படு­கிறது.

ஆனால் சீரான தலைசிறந்த பொது போக்­கு­வரத்து வசதிகள் உள்ள சிறு நாட்­டில் நம்­மில் எத்­த­னைப் பேருக்கு கார் அவ­சி­யம்? வாகன உரி­மைச் சான்றி­தழ் (சிஓஇ) கட்­ட­ணங்­கள், ஏப்­ரல் 19ஆம் தேதி வர­லாற்­றில் காணாத உச்­சத்தை தொட்டன.

சிறிய கார் பிரி­வில் சிஓஇ கட்டணம் $103,721 எனவும் பெரிய கார்கள், கூடுதல் சக்­தி­வாய்ந்த மின்­சார வாக­னங்­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்ட பிரி­வில் கட்­ட­ணம் $120,889 எனவும் பதி­வா­கின. கைக்கு எட்­டாத தூரத்­தில் கார் விலை ஏற்­றம் கண்டு வரு­கிறது.

காரைப் போல தனி­யார் வீடு­கள் வைத்­தி­ருப்­ப­தும் தகுதி நிலை­யைக் குறிக்­கும் வச­தி­யாகக் காணப்­ப­டு­கிறது.

வீட்டு விலை­களும் கணி­ச­மாகக் கூடி­யுள்­ளன. நான்­கறை அல்­லது அதற்­கும் சிறிய வீட­மைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடு­களை வாங்­கும் குடும்­பங்­க­ளுக்குக் கூடு­த­லாக $30,000 வீட­மைப்பு மானி­யம் கிடைக்­கும் என்று 2023 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அர­சாங்­கம் தெரி­வித்­தது.

வீவக வீடு­க­ளுக்கு அர­சாங்­கம் உதவி­களை வழங்கி வந்­தா­லும் தனி­யார் வீடு­களை வாங்­க விரும்பும் மக்களின் ஆசை வருங்காலத்­தில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு எளி­தா­க நிறைவேறும் ஒன்றாக இராது.

கடன் அட்டை பயன்­பாடு அதி­க­ரிக்­கிறது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­கள் இல்­லாத நிலை­யில் வெளி­நாட்டுப் பய­ணம், வணி­கம், உண­வ­ருந்­து­வது போன்றவை மீண்­டெ­ழுந்­த­தால் கடன் அட்­டை­க­ளின் பயன்­பா­டும் அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்­பிடு­கை­யில் 2022ஆம் ஆண்­டில் தனது கடன் அட்டை நிதிப் புழக்கம் 20% கூடியதாக டிபி­எஸ் வங்கி கூறியது.

இளைய தலை­மு­றை­யி­னர் தமது வேலை மீது கொண்­டுள்ள கண்­ணோட்­ட­மும் வெகு­வாக மாறு­கிறது. நம் முன்னோரைப் போல பல ஆண்டு­களாக விசு­வா­சத்­து­டன் ஒரே நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி, சம்­ப­ளம் ஈட்டி, பணம் சேமிக்­கும் பழக்­கம் எல்லாம் மலை­யேறி­விட்­டது.

ஒரு வேலையில் இரண்டு, மூன்று ஆண்டு­கள் இருந்தாலே அது பாராட்டுக்கு உரி­ய­தா­கி­வி­டு­கிறது. பணம், பதவி மட்­டும் பாரா­மல் மன­நிறைவு, விருப்­ப­த்திற்கு ஏற்ற வேலை, மகிழ்ச்­சி­யாக இருப்­பது என்று வேலை சார்ந்த இலக்­கு­களும் மாறி­விட்­டன.

முந்­தைய காலங்­களில் நகர்ப்­புற கேளிக்கை விடு­தி­களில் உறுப்­பி­ன­ராக சேர்­வ­தன் மூலம் மக்களில் பலரும் புதியவர்களைச் சந்­தித்து விளை­யாட்டு, உணவு அருந்­து­வது போன்­ற­வற்­றில் ஈடு­பட்டு பொழு­தைக் கழிப்­பார்­கள்.

சமூக ஊட­கம், தொழில்­நுட்­பம், மெய்­நி­கர் இணைய விளை­யாட்­டு­கள் இளை­யரின் கவ­னத்தை ஈர்த்து வரும் இப்போதைய உல­கில் அது­போன்ற மன்றங்களில் உறுப்­பி­ன­ரா­வது பல­ருக்­கும் அவ­சி­ய­மில்­லா­மல் போய்­விட்­டது.

நான் சிறு­வ­னாக இருந்­த­போது ஒவ்­வொரு விடு­முறை நாளும் அடுக்­கு­மாடி கட்­ட­டத்­தின் கீழ்த்­த­ளத்­தில் சிறார்­களு­டன் காற்­பந்து விளை­யா­டு­வேன்.

ஒரு­வ­ருக்கு ஒரு­வர் கேலி செய்து கொண்டும் போட்­டி­ போட்டுக்கொண்டும் விளை­யா­டு­வோம், சண்டை­யி­டு­வோம், ஆனால் அனைத்தை­யும் தாண்டி சகோ­தரர்­களைப் போல இணைந்­து­கொள்­வோம். இப்­போ­தைய பல விளை­யாட்டுப் பூங்­காக்­கள் வெறிச்­சோடி காணப்­ப­டு­கி­ன்றன.

‘5சிஸ்’ கோட்பாட்டை அல­சிப் பார்ப்­ப­தில் ஒன்று நிச்­ச­ய­மாக தெரி­கிறது. கடந்த 20 ஆண்­டு­களில் சிங்­கப்­பூர் பல மடங்கு மாறி­விட்­டது என்­பதுதான் உண்மை. இக்­கால சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தேவை­கள் வேறு.

பொருள் வசதி மட்­டும் நம் சமு­தா­யத்­திற்குப் போதாது, உயர்ந்த வாழ்க்­கைத்த­ரத்­தை­யும் எதிர்­பார்க்­கி­றோம்.

பல்வேறு உலகப் பிரச்­சி­னை­க­ளுக்கு இடையே பாது­காப்­பான, சுத்­த­மான, வசதி­யான ஒரு நாடாக சிங்­கப்­பூர் திகழ்­கிறது என்­றா­லும் எதிர்­கால சவால்­களைச் சமா­ளிப்பதில் ஒரே சமுதாய­மாக நாம் கொண்டுள்ள இலக்கு­களும் முக்­கிய பங்­க­ளிக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!