‘வரலாற்று தகவல்களைத் தரவுள்ள தங்கலான் படம்’

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.

இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தைப் பற்றிய கதை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்.

இப்படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அண்மையில் இப்படத்தின் ‘டீசர்’ வெளியானது. மிரட்டலான நடிப்பு, சண்டை காட்சிகளுடன் வரலாற்றைக் கூறும் படமாக அது இருந்தது. 9 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளையும் அது பெற்றது.

டீசருக்கு நல்ல வரவேற்பு வர படக்குழுவினர் ‘போஸ்டர்’ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் வரலாற்றின் பெட்டகம் திறக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சரித்திரப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் விக்ரம் 30 வயது இளைஞர், வயதான முதியவர் என இரண்டு தோற்றங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக நாள்தோறும் ஐந்து மணி நேரத்தை ஒப்பனைக்காகவே விக்ரம் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டிருந்தார்.

இந்திய சுதந்திரத்திற்கு முந்திய காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் மாளவிகா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காகச் சிலம்பாட்டம், குதிரையேற்றம் என்று பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட மாளவிகா, தங்கலான் நிச்சயமாக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவரும் என்று நம்புகிறார்.

மாளவிகாவின் மாறுபட்ட தோற்றம் அவர் காட்சியளிக்கும் விதம் போன்றவை படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ‘தங்கலான்’ படத்தில் விக்ரமின் நடிப்பு அருமையாக இருந்தது என்றும் அவருக்கு மேலும் ஒரு தேசிய விருது கிடைக்கும் என்றும் அப்படக்குழுவினர் கூறுகின்றனர்.

படப்பிடிப்பின்போது சில காட்சிகளில் அவரது உருக்கமான, ஆவேசமான நடிப்பைக் கண்டு ஒட்டுமொத்த படக்குழுவும் அசந்து போய் கைத்தட்டிப் பாராட்டியதாம்.

அதனால் இப்படம் இந்திய அளவில் பேசப்படும் வரலாற்றுப் படமாக இருக்கக்கூடும் என்று படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

இதுபோன்ற தகவல்களுடன் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டையும், முன்னோட்டத்தையும் எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

‘தங்கலான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!