‘நடிகை என்ற அடையாளம் பிடித்து இருக்கிறது’

தமிழில் தமக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது சரியல்ல என்கிறார் அனு இமானுவேல். நிறைய வாய்ப்புகள் தேடி வந்தாலும் குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே தேர்வு செய்வதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து பெரிய நடிகர்களுடனும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான நீளமான பட்டியல் என்னிடம் உள்ளது. எனினும் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன். அது ரகசியம்.

“அந்த பட்டியலில் நான் ஏற்கனவே இணைந்து நடித்த கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன,” என்று கூறியுள்ளார் அனு.

திரைத்துறை தமக்கு மிகவும் பிடித்தமானது என்று குறிப்பிட்டு கூறியுள்ள அவர், வாழ்நாள் முழுவதும் நடிகை எனும் அடையாளத்துடன் இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

“எனவே தான் ‘சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து, அவை அமையும்போது ஏற்றுக் கொள்கிறேன். பெண்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள்.

“அதற்காக ஆண்கள் திறமையற்றவர்கள் என்று சொல்லவில்லை. அவர்களிடமும் பல்வேறு திறமைகள் உள்ளன.

“ஆண் பெண் என எல்லாரும் நல்ல பண்புகளையும் திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும்,” என்று பக்குவமாகப் பேசுகிறார் அனு. இவர் அமெரிக்காவில் பிறந்தவர். தந்தை தயாரிப்பாளர். இருப்பினும் தன் திறமையை மட்டுமே நம்பி இத்துறையில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்.

“அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நம் வாழ்க்கை பயணத்தில் மாற்றங்கள் என்பன தொடர்ந்து இருக்கவே செய்யும். நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை என்பதை நான் ஒப்பு கொள்கிறேன்.

“அந்த வகையில் தவிரக்க முடியாத மாற்றங்களை நான் ஏற்கிறேன்,” என்று சொல்லும் அனு நடிப்பில் தற்போது ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

திரைத்துறைக்கென சாதக, பாதக அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

“நன்றாக நடித்தால்’ நமது திறமைக்கேற்ற வாய்ப்புகள் தேடி வரும். வெவ்வேறு சவாலான கதாபாத்திரங்களும் அமையும் என்பது சாதகமான அம்சம். பாதகம் என்றால் அது நாம் சந்திக்கும் தோல்விகள் என்பேன்.

“இங்கு ஒருவர் வெற்றி பெற்றால் எப்படி உடனுக்குடன் எல்லாருக்கும் தெரிந்து போகுமோ அதே போல் நாம் தோற்றாலும் உடனே பரவி விடும். நம் தோல்வியை மட்டுமே எல்லாரும் பெரிதுபடுத்திப் பேசுவர்,” என்று தெரிவித்துள்ளார் அனு.

நடிகைகள் என்பதற்காக தேவையின்றி கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அனு, இதுவரை கவர்ச்சியாக நடிக்கச் சொல்லி தம்மை யாரும் வற்புறுத்தியதில்லை என்று கூறியுள்ளார்.

“எனக்கு எரிச்சல் ஏற்படும்படி ஏதேனும் இருந்தால் அதை முகத்திற்கு நேராக சொல்லி விடுவேன். இதுபோன்ற தருணங்களில் நாம் அனுசரித்து போகவேண்டிய கட்டாயம் இல்லை.

“பெண்கள் திரைத் துறைக்கு வர தயங்கவோ, அச்சப்படவோ தேவையில்லை. பெண்ணாக இருப்பது பெரிய பலம் என்ற கருத்தில் உறுதியாக இருந்தால் சிக்கல் இல்லை. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு தாக்குபிடிக்க முடியாது,” என்கிறார் அனு.

தற்போது திரையுலகில் நிறைய புது வாய்ப்புகள் உருவாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வாய்ப்புகளை இளையர்கள் நன்கு பயன்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

“திரையுலகில் நானும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அது நிறைவேறும் என நம்புகிறேன்,” என்கிறார் அனு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!