இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகரான பிரம்மானந்தத்தின் சொத்து மதிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகின் ஜாம்பவான் பிரம்மானந்தம். இவர் தெலுங்குத் திரையுலகில் மிகவும் பிரபலம் என்றாலும் தமிழ், கன்னடம் என கிட்டத்தட்ட 1,000 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
மேலும் 67 வயதாகும் நடிகர் பிரம்மானந்தம் தற்போது மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 1987ல் தனது திரைப் பயணத்தை துவங்கிய நடிகர் பிரம்மானந்தம் இன்று வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், மூத்த நடிகர் பிரம்மானந்தத்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ.490 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்தான் இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகர் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.