அசோக் செல்வன்: ஒரு நடிகனாக நாயகிகளுடன் நெருக்கமாக நடிக்க வேண்டியது அவசியம்

அசோக் செல்வன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘சபாநாயகன்’. நகைச்சுவையான கதை களத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்காக தாம் அதிகம் மெனக்கெட்டதாக அவர் கூறியுள்ளார்.

இப்படம் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய அசோக் செல்வன், ‘சபாநாயகன்’ மிக ஜாலியான படம் என்றும் இதில் இடம் பெற்றுள்ள நகைச்சுவையும் நடனமும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

“இந்த இரண்டுமே எனக்குப் புதிதாக இருந்தது. திறமையான இயக்குநர்கள் இது போன்ற வாய்ப்புகளுடன் நம்மைத் தேடி வரும்போது என்னைப் போன்ற நடிகர்கள் அதை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

“முதல் காதல், பள்ளிக்கால வாழ்க்கை போன்ற சில நினைவுகள் நம் மனதில் அழியாமல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நினைவுகளை கிளறிவிடும் படமாக ‘சபாநாயகன்’ இருக்கும்.

“மேலும் மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகவும் பலருக்கு இப்படம் அமையக்கூடும்.

“படம் பார்ப்பவர்களுக்கு தங்களுடைய பழைய வாழ்க்கைக்குள் சென்று மீண்டும் ஒருமுறை வாழ்ந்த மனநிறைவை ஏற்படுத்தக்கூடும்,” என்றார் அசோக் செல்வன்.

இந்தப் படத்தில் அவருக்கு மூன்று நாயகிகளாம். இதற்கு முன் ‘மன்மதலீலை’ படத்திலும் இவருக்கு மூன்று நடிகைகள் நாயகிகளாக அமைந்தனர். அதே போல் ‘ஓ மை கடவுளே’ படத்திலும் இரண்டு நாயகிகள்.

இது குறித்து நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர், இதுபோன்ற வாய்ப்புகள் தானாக அமைவதாக கூறிச் சிரித்தார்.

“கதைப்படி எல்லா படங்களிலும் நாயகிகளுடன் நெருக்கமாக நடித்து இருக்கிறேன். ஒரு நடிகனாக ஒரு கதை நம்மிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறதோ அதை கொடுத்தாக வேண்டும்.

“என் மனைவியும் ஒரு நடிகை என்பதால் நான் இவ்வாறு நெருக்கமாக நடிப்பதை அவர் தவறாக நினைக்க மாட்டார். எங்கள் இருவருக்கும் தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல புரிதல் உள்ளது,” என்றார் அசோக் செல்வன்.

தற்போது உள்ள இளம் நாயகர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இவர் சம்பளத்தைவிட நல்ல கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக திரையுலகத்தினர் பாராட்டுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!