வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்த ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரது ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோரும் இணைந்துள்ளதாக புதுத் தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.