‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் நடித்த பாட்டி சுப்புலட்சுமி மரணம்
‘ராமன் தேடிய சீதை’, அண்மையில் வெளியான நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் பாட்டி வேடத்தில் நடித்து இருந்தார் சுப்புலட்சுமி. இந்தப் படத்தின் இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பாட்டி வேடங்களில் இவர் தோன்றினார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இவர் நேற்று முன்தினம் காலமானார். சிறந்த பாடகியும் நடனக் கலைஞருமான இவர் 1957ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியில் சேர்ந்தார். அப்போது தென்னிந்தியாவில் வானொலியில் முதல் பெண் இசைக் கலைஞர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.