அனுபவங்களை அசை போடுவது ஆனந்தம்: சஞ்சிதா

கடந்த கால அனுபவங்களை அசைபோட்டுப் பார்ப்பது அலாதியான, ஆனந்தமான அனுபவம் என்கிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடிப்பில் உருவாகி உள்ள ‘மாயவலை’ படத்தின் படப்பிடிப்பின்போது கிடைத்த அனுபவங்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ ஊடக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இப்படத்தின் கதையாம். எனவே, படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில்தான் நடைபெற்றதாம்.

“அதனால் உள் அரங்குகள், சாலையோரங்களில் அமைந்துள்ள இடங்கள், கடற்கரை என அனைத்து பகுதிகளிலும் இரவு நேரத்தில்தான் காட்சிகளைப் படமாக்கினோம். அந்த வகையில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சொகுசு தங்கு விடுதியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. சூரியன் உதிக்கும்போது எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகள் என்னை மீண்டும் பழைய நினைவுகளை அசை போட வைத்தன.

“நான் அறிமுகமான ‘தில்லாலங்கடி’ படத்தின் படப்பிடிப்பு இதே இடத்தில் தான் நடைபெற்றது. இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் உருவான அந்தப் படம்தான் என்னை ரசிகர்களுக்கு அறி முகப்படுத்தியது.

“13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் ஒரு படப்பிடிப்பு நடக்கும் என்றோ, நான் அதில் நடிப்பேன் என்றோ கனவில்கூட நினைக்கவே இல்லை. அன்றைய இரவு 13 ஆண்டுகளை நான் திரையுலகில் கடந்து வந்து இருப்பதை நினைத்து பார்த்தேன்.

“எத்தனையோ மேடு பள்ளங்களைச் சந்தித்து விட்டேன். அதனால் வெற்றி, தோல்விகளை சரி சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் என்னுள் வந்து இருக்கிறது என்பதை உணர முடிந்தது,” என்று சஞ்சிதா தெரிவித்து உள்ளார்.

‘மாயவலை’ படத்தின் சில காட்சிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியிலும் நடத்தியுள்ளனர். ஒரு காட்சியில் சஞ்சிதா முன்னே நடந்து செல்ல நடிகர் சரண் அவரைப் பின் தொடர்வாராம்.

“இரவு நேர படப்பிடப்பு என்பதால் அக்குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு எங்களால் எந்தவிதத் தொல்லையும் ஏற்படக்கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்தார். அதனால் கூடுமானவரை எந்தவித சத்தமும் இல்லாமல் அவரவர் வேலையைச் செய்தோம்.

“ஒளிப்பதிவாளர் ராம்ஜி கேமராவுடன் எங்களை தொடர, இயக்குநரும் மற்றவர்களும் தூரத்தில் இருந்தபடி எங்களை வழிநடத்தினர். கைப்பேசிகளைப் பயன்படுத்தியது வசதியாக இருந்தது. அந்தக் காட்சியில் நானும் சரணும் நடந்து சென்று ஒரு வேனில் ஏறிக்கொள்வோம். அதன் பிறகு அந்த வாகனம் நகரத் தொடங்கியதும் வசனங்களைப் பேசுவோம்.

“அந்த வேனைக் கண்டதும் மீண்டும் நினைவுகள் மலர்ந்தன. ‘சூதுகவ்வும்’, படத்திலும் இதேபோன்ற வேன் ஒன்று இடம்பெற்றது. அந்த வாகனத்தின் உட்புறத்தில் காட்சிகளை எடுத்தனர்.

“இப்படி ‘மாயவலை’ திரைபடத்தின் படப்பிடிப்பு முடியும் வரை பழைய சம்பவங்கள் ஏதோ ஒரு வகையில் நினைவுக்கு வந்து போயின. அந்த இனிய அனுபவங்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவற்றை அசை போடுவதுதான் ஆனந்தம் அளிக்கும்.

“புதுப் படங்களில் ஒப்பந்தமாகும்போது இரவு நேர படப்பிடிப்பு உள்ளதா என்று மறக்காமல் கேட்டுவிடுகிறேன். ஒட்டுமொத்தப் படக்குழுவுடன் இரவு படப்பிடிப்பில் பங்கேற்கும்போது கடினமாக உழைத்தாலும் ஓய்வின்றி செயல்பட்டாலும் சோர்வு ஏற்படுவதே இல்லை,” என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான இவரது கவர்ச்சிப் புகைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சிலரது எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிட்டது.

“வாய்ப்புகளுக்காக நான் இவ்வாறு செய்யவில்லை. ரசிகர்கள் நம்மை வெவ்வேறு கோணங்களில் பார்த்துக் கொண்டிருந்தால்தான் நம்மை நினைவில் வைத்திருப்பார்கள். அதனால்தான் சில புகைப்படங்களைப் பகிர்ந்தேன்,” என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!