‘காதல், துரோகம், வஞ்சம், வலி என எல்லாம் இருக்கும்’

காதல், துரோகம், வஞ்சம், வலி என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிறது ‘ஹிட்லர்’. மணிரத்தினத்தின் முதன்மைச் சீடரான தனா இயக்கி உள்ளார்.

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, இயக்குநர் கௌதம் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

“அதிகாரம் என்பது ஒருவர் பின்னால் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒருவர் பின்னால் நான்கைந்து பேர் நின்றால் அவனால் ரவுடியாக முடியும்.

“நாற்பது பேர் இருந்தால் அவன் குண்டர் கும்பல் தலைவனாகலாம். அதே சமயம் ஒருவர் பின்னால் நான்கு கோடி பேர் நின்றால் தலைவனாகிறான்.

“அந்த வகையில் கதை நாயகனின் பின்னால் ஒரு சின்ன கூட்டம் நிற்கிறது. அதை வைத்து சர்வாதிகாரத்திற்கு எதிராக அவனால் என்ன செய்ய முடியும் என்பதை விரிவாக காட்டியுள்ளோம். இதுதான் ‘ஹிட்லர்’ படத்தின் கதை,” என்கிறார் இயக்குநர் தனா.

வழக்கமாக விஜய் ஆண்டனிக்கென்றே சில கதைகள் அமையும் என்று விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் தனா, அத்தகைய போக்கை இந்தப் படத்தின் மூலம் உடைக்க வேண்டும் என விரும்பியதாகச் சொல்கிறார்.

“அவருக்கே உரிய கதைக்களத்தில் இருந்து எந்த அளவுக்கு வெளியே கொண்டு வர முடியுமோ அதைச் செய்தேன். விஜய் ஆண்டனிக்கு என கதை எழுதாமல் எனது கதைக்குள் அவரைக் கொண்டு வருவதுதான் எனது திட்டம்.

“கதைக்குள் தன்னை பொருத்திக் கொள்ள அவருக்கு கூடுதல் உழைப்பு தேவைப்பட்டது. அவரது உடல் மொழி, பழகும் போக்கு, குணாதிசயங்கள் ஆகியவற்றை சற்றே மாற்றிக் கொண்டார்.

“முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பு மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.

“சட்டெனப் பார்க்கும்போது இது விஜய் ஆண்டனிதானா என்ற சந்தேகம் கூட எழும். இந்தக் கதை ஒருவரை மட்டுமே மையப்படுத்தி இருக்காது.

“கதாநாயகி ரியா சுமன், கவுதம் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி என பெரும்பாலான பாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும்,” என்கிறார் தனா.

கதாநாயகியாக வேறு ஒருவரைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தனராம். எனினும் படப்பிடிப்புக்கு முன்பு திடீரென அந்த நடிகையின் வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டாராம்.

அவரது இடத்தில்தான் ரியா சுமனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

“இந்த கதைக்கு அழகான கதாநாயகி இருந்தால் போதாது. நாயகிக்கான கதாபாத்திரத்தை அழகாக செதுக்கி உள்ளோம். அவரது வாழ்க்கையில் நிறைய வலி, சின்ன காதல் எனப் பல அம்சங்கள் இருக்கும்.

“கடைசி நேரத்தில் ஒப்பந்தம் ஆனதால் ரியா எப்படி நடிப்பார் என்று கணிக்க முடியவில்லை. என் கதையை மட்டுமே முழுமையாக நம்பி களம் இறங்கினேன்.

“ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட மிக அருமையாக நடித்துள்ளார். படப்பிடிப்பிற்கு முன்பே கதையை நன்கு உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு வந்தார்.

“ரியாவுக்கு தமிழ் அறவே தெரியாது. எனினும் உச்சரிப்பில் எங்களை ஏமாற்றவில்லை. அந்த வகையில் தமிழில் நல்ல நடிகையை அறிமுகப்படுத்திய மனநிறைவு உள்ளது,” என்கிறார் இயக்குநர் தனா.

இப்படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாக பாராட்டுகிறார். ‘ஹிட்லர்’ படத்திற்கான பாடல்களை விவேக், மெர்வின் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர்.

முதன் முறையாக அவர்களைச் சந்தித்துப் பேசியபோதே நல்ல புரிதல் ஏற்பட்டதாகவும் கதையை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு இருவரும் நல்ல பாடல்களை தந்துள்ளதாகவும் பாராட்டுகிறார்.

‘ஹிட்லர்’ படம் விரைவில் உலகெங்கும் வெளியீடு காண உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!