சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள புதுப்படமான ’வடக்குப்பட்டி ராமசாமி’ எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கெனவே ’டிக்கிலோனா’ என்ற படத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர்.
ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.