‘ரெபல்’: இது ஒரு போராளியைப் பற்றிய கதை

அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ரெபல்’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார்.

இது போராளியைப் பற்றிய கதையாம். அதனால்தான் இப்படியொரு தலைப்பைத் தேர்வு செய்திருப்பதாக கூறுகிறார் இயக்குநர்.

“கல்லூரியில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி கதை சொல்லி இருக்கிறேன். அடிதடியும் உண்டு,” என்கிறார் நிகேஷ்.

கடந்த 1980களில் நிகழ்ந்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

எனவே, காதல், அடிதடி, நகைச்சுவை என வணிக ரீதியிலான அம்சங்களையும் இப்படத்தில் எதிர்பார்க்கலாம் என்று உத்தரவாதம் அளிக்கிறது இயக்குநர் தரப்பு. அந்த வகையில் மக்களுக்கு இந்தப் படம் பிடித்துப்போகும் என்கிறார்.

“இந்தப் படத்தில் சில முக்கியமான அரசியல் குறித்துப் பேசியுள்ளேன். அதனால்தான் இது மக்களுக்கான அரசியல் படம் என உறுதியாக கூறமுடிகிறது.

“நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். வாசிப்பு அனுபவத்தின் மூலம் பல புரட்சியாளர்கள் என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

“எங்கள் ஊரைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கேரள மாநிலத்திற்குப் படிக்கச் செல்வர். அவர்களுடைய அனுபவங்களும் இந்தப் படத்திற்கான கதையை எழுதுவதில் முக்கிய பங்கு வகித்தன,” என்கிறார் நிகேஷ்.

இந்தக் கதையை எழுதி முடித்த உடனேயே இவர் மனதில் முதலில் தோன்றியது ஜி.வி.பிரகாஷ் முகம்தானாம். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் இதை ஏற்றுக் கொண்டாராம்.

“கதை கேட்டதும் மிகவும் பிடித்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறினார். அவரிடம் ஒருவித தயக்கம் நிலவியதைப் புரிந்துகொண்டேன். அவர் இதுவரை காதல், நகைச்சுவை படங்களில்தான் அதிக கவனம் செலுத்தி உள்ளார். திடீரென ‘அசுரன்’ போன்ற ஒரு கதைக்களத்தில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்தது.

“இருப்பினும் கதையை நம்பி களமிறங்கியுள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷை தமிழ் ரசிகர்கள் ‘ஆக்‌ஷன்’ நாயகனாகப் பார்ப்பார்கள்.

“சண்டைக் காட்சிகளுக்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். எந்தவொரு காட்சிக்கும் அவர் ‘டூப்’ போடவில்லை. மேலும் நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை,” என்கிறார் நிகேஷ்.

படத்தின் கதாநாயகி மமிதா சிறப்பாக நடிக்கக் கூடியவர். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழ் தெரியும் என்பதால் சொந்தக் குரலிலேயே பேசி நடித்துள்ளார். படத்தின் முதல் பாதியில் காதல் காட்சிகளில் அசத்தியவர், இரண்டாம் பாதியில் அதற்கு நேர் எதிராக நடித்திருப்பார்.

“மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் வெளியானபோது அனைவருக்கும் அது புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அதேபோன்று எனது படமும் புது அனுபவத்தைக் கொடுக்கும்.

“சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்பதால் ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவரது இசையில் அருண் ராஜா காமராஜ், சித்து குமார், ஏகாதசி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

“இப்படத்திற்காக அனைவருமே கூடுதலாக உழைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காட்சியை மலைப்பகுதியில் படமாக்கியபோது அனைவருமே கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மலைப்பகுதி என்பதால் வாகனங்கள் செல்ல முடியாது. பல நிமிடங்கள் நடந்துதான் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைய முடியும்.

“மேலும் இரவு பகல் பாராமல் படப்பிடிப்பை நடத்தினோம். படக்குழுவில் இருந்த அனைவருமே எப்போது அந்தக் காட்சி முடிவுக்கு வரும் என்று சோர்வுடன் காத்துக்கிடப்பார்கள்.

“ஆனாலும் உழைப்பில் யாருமே குறை வைத்ததில்லை. படக்குழுவின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்,” என்கிறார் அறிமுக இயக்குநர் நிகேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!