கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து அனைவரையும் நெகிழ வைத்த மிர்னா: பாராட்டும் இயக்குநர்

‘பெர்த் மார்க்’ என்ற படத்தில் தனி நாயகியாக நடிக்கிறார் மிர்னா மேனன்.

தமிழ் ரசிகர்களுக்கு அதிதி மேனன் என்று சொன்னால்தான் தெரியும். ஏனெனில் ‘பட்டதாரி’, ‘களவாணி மாப்பிள்ளை’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் இந்தப் பெயரில்தான் நடித்துள்ளார்.

பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் பிறமொழிப் படங்களில் கவனம் செலுத்தியவர், ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்தார்.

இவர் நடித்த ‘புர்கா’ படம் ஓடிடி தளத்தில் வெளியீடு கண்டது.

இந்நிலையில், விக்ரமன் ஸ்ரீதரன் இயக்கும் ‘பெர்த் மார்க்’ மிர்னாவுக்கு கைகொடுத்துள்ளது.

இப்படத்தின் கதை மிர்னாவின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகருமாம். கதைப்படி ஏழு மாத கர்ப்பிணியாக நடித்துள்ளாராம் மிர்னா.

இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாகப் பாராட்டுகிறார் இயக்குநர்.

“மொத்தம் 36 நாள்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு திறமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தேடிக் கொண்டிருந்தோம். அந்தத் தேடல் மிர்னாவைப் பார்த்த பிறகுதான் முடிவுக்கு வந்தது.

“நான் உருவாக்கி இருந்த கதாபாத்திரத்துக்கு அவர் மிகப் பொருத்தமானவராக இருந்தார். மிர்னா கடுமையாக உழைக்கக்கூடியவர்.

“படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும், என்னென்ன காட்சிகளைப் படமாக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வார். அதன் பின்னர் குழப்பங்களுக்கு இடம்கொடுக்காமல், அருமையாக நடிப்பார்.

“இயக்குநராக எனது பணியை அவர் எளிமையாக்கினார் என்பேன். ஒரு நடிகையாக அவரிடம் உள்ள தெளிவும் திட்டமிடும் பாங்கும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

“ஜெனி கதாபாத்திரத்துக்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தி இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதுவரை பார்க்காத மிர்னாவை நிச்சயம் இப்படத்தில் பார்க்கலாம்.

“அதிலும் கர்ப்பிணிப் பெண்ணாக அவரது நடிப்பு படம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கும்,” என்கிறார் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்.

இப்படத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!