சீதா ராமம் படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும் படம் ‘லக்கி பாஸ்கர்’
இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். படத்தில் துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு வங்கி காசாளராக துல்கர் நடித்துள்ளார். வங்கியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எப்படி துல்கர் வங்கியை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என்பதுதான் கதை என்று கூறப்படுகிறது. படம் தெலுங்கில் தயாரானாலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாகிறது.
இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் தெலுங்கு ‘டீசர்’ வெளியாகியுள்ளது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை டீசர் பார்க்கப்பட்டுள்ளது.