சுமைகள் இருந்தாலும் சுயமுன்னேற்றம் சாத்தியம்

சிங்கப்பூரின் போட்டித்தன்மை மிக்க சூழலில் வாழ்வில் முன்னேற கல்வியும் திறன்மேம்பாடும் கட்டாயமாக உள்ளன. குடும்பம், வேலை, வயதின் தளர்ச்சி என பல சவால்கள் இருந்தபோதும் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் வகுப்பு களுக்குச் சென்று, பட்டம் பெற்றிருக்கும் ஷீலாவும் நாஸ்நீயும் எந்த வயதிலும் எந்தச் சூழலிலும் படிப்பது சாத்தியம் என்பதை மெய்ப்பித்துள்ளனர்.

 

பட்­ட­யப் படிப்பை முடித்து 20 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு வணிக நிர்­வா­கத்­தில் முது­க­லைப் படிப்பை முடித்­துள்­ளார் 42 வயது ஷீலா நல்­லையா.

இம்­மா­தம் முதல் தேதி நடை­பெற்ற கப்­லான் (Kaplan) சிங்­கப்­பூ­ரின் பங்­கா­ளித்­து­வப் பல்­கலைக்­க­ழ­க­மான முர்­டோக் பல்­கலைக்­க­ழ­கத்­தின் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் பட்­டம் பெற்ற 350 பட்­ட­தா­ரி­களில் ஒரு­வர் மூன்று மகள்­க­ளுக்­குத் தாயான திரு­மதி ஷீலா.

கடந்த 10 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் பணி­புரி­யும் இவர், திறன் மேம்­பாட்­டுக்­கும் பதவி உயர்­வுக்­கும் மேற்­கல்வி அவ­சி­யம் என உணர்ந்­த­போது, பணி­யி­டம் அளித்த நிதி ஆத­ர­வைப் பயன்­ப­டுத்தி முது­நிலைப் படிப்­பில் சேர்ந்­தார்.

ஆர்­வம் இருந்­த­போ­தும், நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு பாடம் படிப்­ப­தும் வகுப்­பு­க­ளுக்­குச் செல்­வ­தும் அவ்­வ­ளவு எளி­தாக இவ­ருக்கு இருக்­க­வில்லை. வேலை, குடும்­பப் பொறுப்­பு­க­ளுக்­கி­டையே வாரத்­திற்கு மூன்று நாட்­களை படிப்­புக்கு ஒதுக்க வேண்­டிய கட்­டா­யம், மிக­வும் மாறி­விட்ட கற்­றல் நடை­மு­றை­கள், நோய்த்­தொற்­றுக் காலத்­தில் இவ­ரது படிப்பு தொடங்­கி­ய­தால் மெய்­நி­கர் வகுப்­பு­க­ளுக்கு தயார் ஆக­வேண்டி இருந்­தது என பல­வற்றை­யும் சமா­ளிக்க வேண்டி இருந்­தது.

பல­முறை பாதி­யி­லேயே விட்டு­வி­ட­லாம் என தோன்­றி­னா­லும் குடும்­பத்­தி­னர், குறிப்­பாக கணவர் தந்த ஊக்­கம் தொடர்ந்து படிக்க வைத்­த­தாக திரு­மதி ஷீலா கூறி­னார்.

கவ­னச் சிதை­வா­லும், வாழ்க்­கை­யில் பிடி­மா­னம் இல்­லா­மல் இருந்­த­தா­லும் 20 வய­தில் உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொறி­யி­யல் பயில கிடைத்த வாய்ப்­பைக் கை நழு­வ­விட்ட நாஸ்நீ பேகம் முக­மது இனா­யத்­துல்லா, 40 வய­தில் இரட்டை முது­நிலைப் பட்­டங்களைப் பெற்­றுள்­ளார்.

பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தில் பணி­புரிந்­த­போது தக­வல் தொழில்­நுட்­பத்­தில் இவ­ருக்கு ஆர்­வம் ஏற்­பட்­டது.

அத்­துறை சார்ந்த நிபு­ணத்­துவ பட்­ட­ய­மும், பின்­னர் விளம்­ப­ரத் துறை­யில் இள­நி­லைப் பட்­ட­மும் பெற்ற நாஸ்நீ, சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வ­மைப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் திட்ட மேலா­ள­ராக சேர்ந்­தார். நீண்ட காலமாக வணிக நிர்­வாகத்­தில் முது­நி­லைப் படிப்பை மேற்கொள்ள வேண்­டு­மென்ற இலக்கை வைத்­தி­ருந்த இவர், முர்­டோக் பல்­கலைக்­க­ழ­கத்­தின் செயற்கை நுண்­ண­றி­வு, தரவு அறி­வி­ய­லி­ல் நிபு­ணத்­து­வ படிப்பிலும், வணிக நிர்­வாகத்­தி­லும் இரட்டை முதுநிலைப் படிப்­பில் சேர்ந்­தார்.

20 ஆண்­டு­கள் கழித்து மீண்­டும் படிக்­கத் தொடங்­கி­னார். ஈராண்­டு­கள் படிப்­புக்கு ஒதுக்க வேண்­டு­மென்­றா­லும், வேலை­யை­யும் பார்த்­துக்­கொண்டு விடா­மு­யற்­சி­யைக் கடைப்­பி­டித்­தார்.

மாலை ஆறு மணி­வரை வேலை, இரவு பத்து மணி­வரை வகுப்­பு­கள் பிறகு நள்­ளி­ரவு இரண்­டு­வரை படிப்பு என்று ஈராண்­டு­கள் சிர­ம­மா­கவே இருந்­தது. எனி­னும், கண­வ­ரின் ஆத­ர­வோடு படித்த நாஸ்நீ அதற்­கான வெகு­ம­தி­யைக் கண்­டார்.

“ஈராண்­டு­கள் படிக்க வேண்டு­மென்ற சிறு தயக்­கம் தொடக்­கத்­தில் இருந்­தது. நான் என்ன செய்­தி­ருந்­தா­லும் ஈராண்­டு­கள் எப்­ப­டியோ ஓடி இருக்­கும். அது பய­னுள்­ள­தா­கக் கழிந்­தது என்பதோடு, பட்­ட­மும் பெற்­ற­தில் பெரு­ம­கிழ்ச்சி,” என்­றார்.

தற்­போது எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் நாஸ்நீ, வாழ்­நாள் கற்­றல் ஒரு­வ­ரின் வாழ்­வில் மிக முக்­கி­ய­மா­னது எனக் கரு­து­கி­றார். பட்­டக்­கல்­வி­யில் பெற்ற திறன்­க­ளைக் கொண்டு செயற்கை நுண்­ண­றிவு துறை­யில் தமது ஆற்­றலை இவர் விரிவு­ப­டுத்­த­வுள்­ளார்.

 

sanush@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!