கனமழை, தொடர் நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் சேதம்

சிம்லா: கனமழை மற்றும் நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சம்மர் ஹில் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானோர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 21 பேர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “நிலச்சரிவு ஏற்பட்ட பல இடங்களை நேரில் பார்வையிட்டேன். தற்போது நான் காங்க்ரா செல்லும் வழியில் இருக்கிறேன். நிலச்சரிவால் அங்கு 800க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளோம். சுமார் 100 பேர் காங்க்ராவில் இன்னும் சிக்கியுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

“இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் இதற்கு முன்பு இது போன்ற பேரழிவு ஏற்பட்டது இல்லை.

“மத்திய அரசின் இடைக்கால நிவாரணம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநிலத்தின் உள்கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்த ஓர் ஆண்டு ஆகும்,” என்று அவர் கூறினார்

இந்நிலையில் உத்தரகாண்டில் மேலும் 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சிம்லா மாவட்ட ஆட்சியர் ஆதித்யா நெகி கூறும்போது, “நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சம்மர் ஹில், கிருஷ்ணா நகர் பகுதியில் 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன” என்றார்.

உத்தரகாண்டின் ருத்ரபிரயாகை மாவட்டத்திலுள்ள மத்மகேஸ்வர் தாம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கனமழை பெய்ததால் அவர்களால் கோயிலை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அருகில் இருந்த பாலம் உடைந்ததால் அவர்கள் நடுவழியில் சிக்கித் தத்தளித்தனர். இதையடுத்து சிக்கித் தவித்த 50 பக்தர்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!