லிபியாவில் குற்றக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த போலி முகவர்கள், இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக இளையர்களுக்கு வலைவிரித்தனர்.

அதில் 17 இளைஞர்கள், வேலைக்காக வெளிநாடு செல்ல முன்வந்தனர். அவர்களிடம் தலா ரூ.13 லட்சத்தை போலி முகவர்கள் கட்டணமாக வசூலித்தனர்.

ஆனால், இத்தாலிக்கு அனுப்பாமல், துபாய்க்கு சட்டவிரோதமாக அந்த இளைஞர்களை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 17 பேரும் லிபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள குற்றச்செயல் கும்பல் அவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டது.

லிபியாவின் ஜுவாரா நகரில் அவர்கள் உணவு உட்பட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் துன்புறுத்தப்பட்டனர். இதுகுறித்து 17 இளைஞர்களின் குடும்பத்தார் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். லிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு கடாபி ஆட்சிக்குப் பிறகு, அங்கு அரசியல் குழப்பம் நிலவுகிறது.

மேலும், குற்றச்செயல் கும்பல் ஆட்களைக் கடத்தி பெரும் தொகையைக் கேட்டு மிரட்டி வருகிறது. இதனால் லிபியாவின் தலைநகர் டிரிபோலியில் இருந்த இந்தியத் தூதரக அலுவலகம், பாதுகாப்பு கருதி தற்காலிகமாக டுனிசியாவின் தலைநகர் டுனிஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. இதனால், 17 இந்திய இளைஞர்கள் லிபியாவில் சிக்கிய தகவல் டுனிஸ் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருடன் டுனிஸில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தனர். மேலும், லிபியா அரசு அதிகாரிகளிடம் இந்தியத் தூதரகமும், டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் நேரடியாக தலையிட்டு, 17 இளைஞர்களை மீட்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து குற்றச்செயல் கும்பலின் பிடியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கான விமானக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!