அரிசிச் சந்தைக்கு நெருக்குதல்

இந்தியாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டின் எதிரொலி

புதுடெல்லி: ஆறே வாரங்களில் அரிசிச் சந்தையை இந்தியா ஆட்டங்காண வைத்துள்ளது.

உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, தனது அனைத்து வகை ஏற்றுமதிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் ஆசியாவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கா வரை அரசாங்கங்கள் பதற்றம் அடைந்துள்ளன.

கடந்த வாரயிறுதியில் புழுங்கல், பாசுமதி அரிசிக்கு இந்தியா கூடுதல் கட்டுப்பாடு விதித்தது. அதையடுத்து, ஆசியாவில் அரிசி விலைகள் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் உச்சநிலையை நெருங்கின.

“அரிசி விலையேற்றம் வசதிகுறைந்தவர்களையே ஆக அதிகமாக பாதித்துள்ளது. அரிசி ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதில் தாய்லாந்தும் வியட்னாமும் இந்தியாவைப் பின்தொடருமா என்பதே இப்போதைய பெரிய கேள்வியாக உள்ளது. அப்படி நடந்தால், உலக அரிசி விலைகள் டன்னுக்கு US$1,000 (S$1,350) நிலையைத் தாண்டும்,” என்றார் ஹார்வர்ட் பல்கலைக்கழக கௌரவப் பேராசிரியர் பீட்டர் திம்மர்.

பில்லியன் கணக்கானோருக்கு முக்கிய உணவுப் பொருளாக உள்ள அரிசி, தென்கிழக்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மக்கள் உட்கொள்ளும் மொத்த கலோரி அளவில் 60 விழுக்காடு வரை பங்கு வகிக்கிறது.

அரிசி விலை தற்போது டன்னுக்கு US$646ஆக உள்ளது. மோசமான வானிலை அதன் விலையைக் கிடுகிடுவென உயர்த்தக்கூடும்.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக் கட்டுப்பாடு ஒருபக்கம் என்றால் மறுபக்கம், இவ்வாண்டு ‘எல் நினோ’ பருவநிலை மாற்றத்தால் ஆசியாவின் பல பகுதிகளிலும் அரிசி விளைச்சலுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வறட்சி ஏற்படக்கூடும் என தாய்லாந்து ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக் கட்டுப்பாடு, அரசியலுடன் தொடர்புடையது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், உணவு விலையேற்றம் வாக்காளர்களைச் சினமடையச் செய்யக்கூடும்.

அரிசி ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், உள்நாட்டு விலையில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. ஓராண்டிற்கு முன்பிருந்ததைவிட, ஆக்ஸ்ட் 31ஆம் தேதி புதுடெல்லியில் அரிசி விலை இன்னும் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஜூலையில் நடப்புக்கு வந்த ஏற்றுமதித் தடைக்குப் பிறகு, அரிசி விலை கிலோவுக்கு ரூ.39 (S$0.64) என நிலையாக இருந்து வருகிறது.

என்றாலும், இந்தியாவின் கட்டுப்பாடுகள் மற்ற நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!