நடராஜர் சிலை இந்தியாவின் பண்பாடு, வரலாற்றுப் பெருமிதம்: பிரதமர் மோடி

புதுடில்லி: ஜி20 மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை, இந்தியாவின் வளமான பண்பாடு, வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது என்று பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளங்களில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

ஜி20 உச்சநிலை மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்றுகூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன், பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும் என்று அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

9ஆம் நூற்றாண்டில் இருந்து, சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட நடராஜர் சிலை உருவாக்கத்திற்கான சிற்ப சாஸ்திரத்தில் குறிப்பிட்டபடி வழிகாட்டுதல்கள் மற்றும் அளவீடுகளை மேற்கொண்டு, தமிழகத்தின் சுவாமிமலையை சேர்ந்த பாரம்பரிய சிற்பிகள் இந்த சிலையை உருவாக்கி உள்ளனர். படம்: மோடியின் டுவிட்டர்

புதுடில்லி, பிரகதி மைதானத்தில் 9,10ஆம் தேதிகள் நடைபெற உள்ள ஜி20 மாநாடு அரங்கத்தின் முகப்பில் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்த ஸ்ரீ தேவசேனா சிற்பக் கூடத்தில் அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

18 டன் எடை கொண்ட இந்தச் சிலை, அஷ்டதாதுக்கள் என அழைக்கப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு, பாதரசம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புகழ்பெற்ற சிற்பியான சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரால் 7 மாதங்களில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. சோழப் பேரரசு காலத்திலிருந்தே 34 தலைமுறைகளாக ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் சிலைகள் செய்து வருகின்றனர். சிலை அமைக்கும் திட்டத்தை கலாசார அமைச்சு செயல்படுத்தியுள்ளது.

இதற்காக எட்டு தனிமங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. செம்பு (87%), துத்தநாகம் (10%), காரீயம் (3%), டின், வெள்ளி, தங்கம், பாதரசம் ஆகியவை குறைந்த அளவிலும் இரும்பும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஏழு மாதங்களில் சிலை உருவாகி உள்ளது. படம்: மோடியின் டுவிட்டர்

பிரபஞ்ச ஆற்றல், படைப்பாற்றல் சக்தி ஆகியவற்றின் முக்கிய அடையாளமான நடராஜர் சிலை ஜி20 உச்சநிலை மாநாட்டில் ஓர் ஈர்ப்பாக அமையும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!