கர்நாடகா: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிக்கலில் மஜத

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத் தலைவர் சையத் சஃபிபுல்லா சாஹிப் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “மதச்சார்பின்மை என்ற அடையாளத்தைத்தான் மக்களுக்குப் பறைசாற்றினோம்.ஆனால் இப்போது சாதிகளிடையே, மதங்களிடையே மோதல்களை உருவாக்கும் சக்திகளுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கைகோத்துவிட்டது. மதத்தின் அடிப்படையில் செயல்படக் கூடிய கட்சியுடனான கூட்டணியை எப்படி ஏற்க முடியும்? என்று தெரிவித்துள்ளார்.

மஜதவை சேர்ந்த தலைவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருகின்றனர். அவர்களுள் முன்னாள் அமைச்சர் என்.எம்.நபியும் ஒருவர்.

அதைத்தொடர்ந்து முன்னாள் டெல்லி பொறுப்பாளர் முகம் அல்தாஃப் ஆகியோருடன் சிறுபான்மைப் பிரிவின் முன்னாள் தலைவர் நசீர் ஹுசைன் ஆகியோரும் மஜதாவில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் மஜத மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம் கூறும்போது, ‘‘பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவுசெய்யப்பட்டது குறித்து எனக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து, வரும் 16ஆ‍ம் தேதி எனது முடிவை அறிவிப்பேன்,’‘ என்று கூறியுள்ளார்.

ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலர் காங்கிரசுக்குத் தாவ உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை குமாரசாமி திட்டவட்டமாக மறுத்தும் இருந்தார்.

மஜத கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருப்பதால் அக் கட்சிக்குக் கிடைக்கும் முஸ்லிம்களின் வாக்குகள் இப்போது கேள்விக்குறியாகி விட்டது என்று கூறப்படுகிறது. அதையடுத்து மஜத கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் குமாரசாமியும் அவரது தந்தை தேவகவுடாவும் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து கட்சிக்கு உயிர்க்கொடுக்க காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் சேரவேண்டிய கட்டாயத்திற்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதஜ கட்சிக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சி தயார் நிலையில் இல்லை.

வேறுவழி இன்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதஜ கட்சி இணைந்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!