புதிய மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்க குழு அமைத்தது கர்நாடகா

பெங்களூரு: இந்தியாவை ஆளும் பாஜக அரசு அமல்படுத்தி உள்ள சர்ச்சைக்குரிய புதிய கல்விக் கொள்கை பல மாநில மக்களாலும் அரசாங்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், மாநில அளவிலான புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னர் கர்நாடகாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு மக்களிடமும் எதிர்க்கட்சியிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இப்போது அங்கு பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு மறுத்துவிட்டது.

அதே நேரத்தில் மற்ற மாநிலங்களைப் போல், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மட்டும் தெரிவிக்காமல் மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டுமிள்ளது. அதற்கென சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்திற்கென தனி புதிய கல்விக்கொள்கையை உருவாக்க பல்கலைக் கழக மானிய குழுவின் (யூஜிசி) முன்னாள் தலைவர் சுக்தேவ் தலைமையில் தனிக்குழுவை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரு சுக்தேவ் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் கல்வியாளர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட 23 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த சிறப்புக் குழுவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலரும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த குழுவினர் மாணவ, மாணவிகளின் நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த கல்விக் கொள்கையை உருவாக்குவார்கள் என்று முதலமைச்சர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதுகுறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநிலப் பாடமான கல்வி குறித்து மத்திய அரசு கொள்கைகளை வகுக்க முடியாது என்று கூறியிருந்தார்..

“மாநிலங்களின் நம்பிக்கையைப் பெறாமல் தேசிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டது. மத்திய அரசு ஒரு கல்விக் கொள்கையை மாநிலங்களின் மீது திணிக்க முடியாது. பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒரு கொள்கை என்பது ஒருபோதும் சாத்தியமில்லை,” என்று குறிப்பிட்ட அவர், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் தேசிய கல்விக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அறிவித்தது. அத்துடன் கர்நாடக மாநிலத்திற்கென தனிக் கல்விக்கொள்கையை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அப்போது அறிவித்திருந்தார்.

அதையடுத்து கர்நாடக அரசு, புதிய மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கர்நாடகாவைத் தொடர்ந்து மேலும் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கென புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!