காசாவுக்கு 32 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி: காஸா மீது இஸ்ரேல் உக்கிரமாகத் தாக்கி வரும் நிலையில், இந்தியா 32 டன் நிவாரணப் பொருள்களையும் 6.5 டன் மருந்துப் பொருள்களையும் அனுப்பியுள்ளது.

நிவாரணப் பொருட்களில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், ஸ்லீப்பிங் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருள்கள் உள்ளிட்டவை இருக்கின்றன’‘ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் காஸா மீது தொடுத்துவரும் இடைவிடாத தாக்குதலுக்கு காசாவின் குடியிருப்புப் பகுதிகள் பலவும் தீக்கிரையாகி விட்டன. இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலுக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமானோர் மாண்டுவிட்டனர்.

இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஈரான், சிரியா, லெபனான், சீனா உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் நிற்கிறோம்,’’ என்று இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, சில தினங்களுக்குப் பிறகு பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் (Mahmoud Abbas) தொலைபேசியில் உரையாடிய மோடி, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என உறுதியளித்திருந்தார்.

அதையடுத்து, காஸாவுக்கு நிவாரணப் பொருள்களையும் மருந்துகளையும் இந்தியா அனுப்பியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் தளத்தில், “காசாவில் வசிக்கும் மக்களுக்கு இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளது,” என்று அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!