கேரள ஆளுநர் மீது மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் தனது அரசியல்சாசனக் கடமையை சரிவரச் செய்யவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடுத்துள்ளது.

தமிழகத்தைப் போல் கேரளாவிலும் மாநில அரசுக்கும் ஆளு நருக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வருகிறது.

மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. உரிய காரணங்கள் இன்றி அம்மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் என்பது ஆளும் தரப்பின் குற்றச்சாட்டு.

இதையடுத்து, தமிழக அரசைப் பின்பற்றி முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசும் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வரிந்து கட்டியுள்ளது.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, விதிமுறைகளைப் பின்பற்றி சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாகவும் ஆளுநரோ அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையறையின்றி கிடப்பில் போட்டுள்ளார் என்றும் கேரள மாநில சட்ட அமைச்சர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இத்தகைய போக்கு அரசியல் சாசனம், ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது என்று அவர் கூறியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மசோதா நிறைவேற்றப்பட்ட உடனே, அரசியல் சாசனத்தின் 200ஆவது விதிப்படி ஆளுநர் செயல்பட வேண்டும். சில மசோதாக்களில் ஆளுநர் முகமது ஆரிப் கான் இந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. பல சட்டத் திருத்த மசோதாக்கள் கிடப்பில் உள்ளன.

“சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றிக் கிடப்பில் போடக்கூடாது. விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், சில மசோதாக்களை சுமார் இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்,” என்று சட்ட அமைச்சர் ராஜீவ் கூறியதாக இந்து ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதா தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அம்மசோதாவை ஆளுநர் பேரவைக்கே திருப்பி அனுப்பலாம் என்றார் அமைச்சர் ராஜீவ்.

அவ்வாறு செய்திருந்தால், மசோதாக்களில் திருத்தங்கள் செய்தோ அல்லது மாற்றம் செய்யாமலோ மீண்டும் நிறைவேற்றுவது பற்றி சட்டப்பேரவை முடிவெடுத்திருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“எனவேதான் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தோம். இது அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. இது சட்டப்பேரவை, ஆளுநர் இடையிலான அரசியல் சாசன உறவு பற்றியது,” என்றார் கேரள சட்ட அமைச்சர் ராஜீவ்.

கேரள அரசின் சட்ட ரீதியிலான நடவடிக்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சில சட்ட மசோதாக்கள் குறித்து தாம் சில கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவற்றுக்கு கேரள அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

“சட்டப்பேரவையில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சரால் எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. எனவே, எனது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டுள்ளேன். முதல்வரிடம் இருந்து எந்தவித விளக்கமும் வராததால், மசோதாக்கள் கையெழுத்திடப்படாமல் உள்ளன,” என்றும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!