மக்களவை தேர்தலில் முக்கியத்துவம் பெறும் இடஒதுக்கீடு

புதுடெல்லி: நாடு முழுவதிலும் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.

இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்க, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் தனது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் பீகார் சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பீகாரில் இடஒதுக்கீடு அளவை 50 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காடாக முதல்வர் நிதிஷ்குமார் உயர்த்தியுள்ளார். இதற்கான மசோதா மாநில சட்டமன்றத்தில் வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, எஸ்.சி. பிரிவினருக்கு 20%, பழங்குடிகளுக்கு 2%, இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 43% இடஒதுக்கீடு கிடைக்கும். இத்துடன் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்குப் பீகார் ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு நாடாளுமன்றமும் சட்டப்பூர்வ அனுமதி அளிக்க வேண்டும். எனவே இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் தவிர 65 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமலாக்க முடியாது.

எனவே, பீகாரின் இடஒதுக்கீட்டு உயர்வுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைப்பது கேள்விக்குறியே. இதன்மூலம் இந்த இடஒதுக்கீட்டுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அரசு தடையாக இருப்பதாக வரும் மக்களவைத் தேர்தலில் அரசியல் செய்ய முதல்வர் நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.

அதே சமயம், நாடு முழுவதிலும் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் இடஒதுக்கீடு அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என தெரிகிறது.

தற்போது 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு அளிக்க முடியாத நிலை உள்ளது. எனினும் தமிழ்நாடு மட்டுமே ஒரே மாநிலமாக கடந்த 1982ஆம் ஆண்டு முதல் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில் இருந்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு இதற்கு தடையானபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதை எதிர்த்துப் போராடினார். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று 69 விழுக்காட்டை சட்டமாக்கி உறுதிப்படுத்தினார். இதன் பிறகு தமிழ்நாட்டைப் போல், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களும் இடஒதுக்கீட்டை உயர்த்த முயன்றன.

எனினும், அவற்றின் முயற்சி வெற்றிபெறவில்லை. மகாராஷ்டிராவுக்கு பிறகு கர்நாடகாவும் இடஒதுக்கீட்டை 50 விழுக்காட்டிற்கு மேல் உயர்த்தியது. எனினும், அந்த உயர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!