மிச்சாங் புயல் : 140 ரயில்கள் ரத்து

விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் மிச்சாங் புயல் ஞாயிற்றுக்கிழமை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் கடலோர ஆந்திர மாவட்டங்களான நெல்லூர், திருப்பதி, ஓங்கோல், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் வரும் 6ஆம் தேதி வரை மழை இருக்கும் என விசாகப்பட்டினம் வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

புயல் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் பலத்த மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது

புயலின் தாக்கத்தால், 140 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி,பெங்களூரு-தனாபூர், கோயமுத்தூர்-பாராவுனி, நரசாபூர்-கோட்டயம், செகந்திராபாத்-கொல்லம், சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, ஹவுரா-பெங்களூரு, சென்னை நிஜாமுத்தீன் எக்ஸ்பிரஸ், கயா-சென்னை, கவுஹாத்தி-சென்னை, பெங்களூரு-கவுஹாத்தி, கோரக்பூர்-கொச்சிவேலி, ஹைதராபாத்-சென்னை,புதுடெல்லி-சென்னை, திருவனந்தபுரம்-சென்னை, மதுரை-நிஜாமுதீன், சென்னை-அகமதாபாத், நாகர்கோவில் - ஷாலிமார், சென்னை - சாப்ரா, மதுரை-சண்டிகர், செகந்திராபாத்-கூடூரு, விஜயவாடா-சென்னை, கூடூரு, விஜயவாடா, ஹைதராபாத்-தாம்பரம், சென்னை-பூரி, திருப்பதி - புவனேஸ்வர் உள்ளிட்ட 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரயில்வே தெரிவித்தது.

ரயில்கள் ரத்து காரணமாக காத்திருக்கும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மிச்சாங் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் கவனமாக இருக்கும் படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் ஆகியோரும் சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!