‘சிங்கப்பூர்போல தென்காசி’

தென்காசியிலிருந்து
கு. காமராஜ்

தென்னகத்தின் காசியாக விளங்கும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திங்கட்கிழமை அன்று (ஏப்ரல் 15) திரும்பிய இடமெல்லாம் பிரசார வாகனங்கள் காணப்பட்டன. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு வாகனங்களுடன் வரிசையாக காரில் வேகமாகச் செல்வதையும் காண முடிந்தது.

இந்தப் பரபரப்பான பிரசாரக் களத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளேடான தமிழ் முரசுக்கு பேட்டியளித்தார்.

யானைப்பாலம் என்ற இடத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், தென்காசியின் தனது எதிர்கால எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தென்காசியை சிங்கப்பூர்போல மாற்ற வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

“இந்தத் தொகுதியில் வேலை வாய்ப்பு இல்லாமல் வேலை தேடி சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குச் செல்கிறார்கள். கட்டிய மனைவி, பெற்ற தாயை விட்டுவிட்டு வேலைக்குப் போகிறார்கள். இங்கேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதுதான் என்னுடைய நோக்கம். தென்காசியை நன்கு வளப்படுத்திவிட்டால் தென்காசியை சுற்றி இருப்பவர்கள்கூட இங்கு வேலைக்கு வந்துவிடுவார்கள்,

“எனக்குத் தெரிந்து திருமணமாகி அடுத்த நாளே சிங்கப்பூருக்கும் மற்ற நாடுகளுக்கும் வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற நிலையை மாற்றுவதுதான் என்னுடைய இலக்கு, இங்கு வெற்றி பெறுவதன் மூலமாக தென்காசியை ஒரு சிங்கப்பூராக கொண்டு வருவதுதான் நோக்கம்,” என்றார் கிருஷ்ணசாமி

தென்காசி தொகுதியின் இயற்கை மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது, இளையர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களுக்கு அதிகரிப்பது, கைத்தறி, நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது, அனைவருக்கும் சுபிட்சமான வாழ்க்கை, மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணி காத்தல், மது, புகை, போதை இல்லா தமிழகம் உருவாக வலுவாகக் குரல் கொடுப்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர் மக்களுக்கு அளித்துள்ளார்.

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Remote video URL

இந்தத் தொகுதியில் இண்டியா கூட்டணி பலத்துடன் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரும் பாஜக சார்பில் பாமக, அமமுக ஆதரவுடன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்  ஜான் பாண்டியனும் நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணனும் போட்டியிடுகின்றனர்.

நான்கு வேட்பாளர்களும் கடைசி கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,

மற்ற தொகுதிகளைப் போல இத்தொகுதியிலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

“விலைவாசி கூடிவிட்டது. வீட்டுவரியும் கூடிவிட்டது. கிருஷ்ணசாமிக்கு இத்தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது,” என்று யானைப்பாலத்தில் பேட்டியளித்த ரத்தினசாமி, 58 தெரிவித்தார்.

சங்கரன்,75, என்பவர், “மக்களுக்கு தேர்தலில் அதிகம் விருப்பமில்லை. வாக்குப்போட்டா போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மாற்றம் ஏற்பட வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கிறது,” என்று கூறினார்.

கடையநல்லூரில் பேசிய சையது முஹமது, 56, கூட்டணி பலத்தால் திமுக வெற்றி பெறும் என்றார்.

அடுத்த சில நாள்களில் அதாவது, ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!