எழுத்து மொழி வளங்கள்: விழிப்பூட்டிய ‘முத்துச்சிதறல்’

உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் ‘முத்துச்சிதறல்’ நிகழ்ச்சி, நான்காவது முறையாக நடந்தேறியுள்ளது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எழுத்துத் தமிழின் சிறப்பு பற்றிப் பேசப்பட்டது. பங்கேற்றோர் இடையே தமிழ் எழுத்து வளங்கள் பற்றிய விழிப்புணர்வும் கலந்துரையாடலை ஏற்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கங்களாக இருந்தன.

சிங்கப்பூர்த் தமிழ் வானொலிப் புகழ் முனைவர் மீனாட்சி சபாபதி, நிகழ்ச்சியின் நெறியாளராகச் செயலாற்றினார். தமிழகத்திலிருந்து வந்திருந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராக இருந்தார்.

‘எழுத்துத்தமிழின் இணையற்ற பேராற்றல்’ என்ற கருப்பொருளையொட்டி தமிழில் உள்ள எழுத்து வளங்களின் சிறப்புகளைப் பற்றி தமிழ் ஆவணப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரான திரு கிருஷ்ணகுமார் பேசினார்.

பேச்சுத்தமிழை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அமைவது நல்லது என்றாலும் எழுத்துத் தமிழில் உள்ள உன்னத எழுத்து வளங்களை மக்கள் தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும் என்று உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் தி. ஜோதிநாதன் தெரிவித்தார்.

சிறப்புப் பேச்சாளர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் படம்: உமறுப்புலவர் தமிழ் உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்

கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் முதன்மைச் சிறப்பாய்வாளர் த.வேணுகோபால், மொழிக் கற்றலுக்கான வளங்களின் தயாரிப்பு குறித்து நிகழ்ச்சி மேடையில் உரையாற்றினார்.

படித்தல் மற்றும் வாய்மொழித்திறன்களைக் கொண்டு சேர்ப்பதன்மூலம் மாணவர்களை நல்ல படைப்பாளர்களாக்க முடியும் என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு வரையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளங்கள் தயாரிக்கப்படுவதையும் முனைவர் வேணுகோபால் பேசியிருந்தார்.

கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவில் முதன்மைச் சிறப்பாய்வாளர் த.வேணுகோபால் நிகழ்ச்சி மேடையில் உரையாற்றினார். படம்: உமறுப்புலவர் தமிழ் உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்துரையாடல் அங்கமும் இடம்பெற்றிருந்தது.

2019ல் முதன்முதலாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது உமறுப்புலவரின் முன்னாள் மாணவர் தமிழ்ச்சங்கம். முன்னதாக ஒரே பள்ளியில் படித்து வளர்ந்த பின்னர் வெவ்வேறு திசைகளில் சென்று பல்வேறு துறைகளில் மின்னும் முத்துக்களான முன்னாள் மாணவர்களை ‘முத்துச்சிதறல்’ என்ற நிகழ்ச்சிப்பெயர் குறிப்பதாக திரு ஜோதிநாதன் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் 10 முன்னாள் மாணவர்கள் பற்றிய வாழ்க்கைக்குறிப்புள்ள சிறப்பு மலர் வெளியிடப்படும். இந்த முறையும் அத்தகைய மலர் ஒன்று வெளியிடப்பட்டது.

“இந்தப் பள்ளியில் தமிழை முதல்மொழியாகப் படித்த மாணவர்கள் தமிழ்த் துறையிலும் மற்ற பல துறைகளிலும் சிறந்து விளங்குவது குறித்து பெருமைப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

தமிழ் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பலர் வந்திருந்தபோதும் அடுத்த முறை கூடுதலான இளையர்களை ஈர்க்க விரும்புவதாக திரு ஜோதிநாதன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!