பதின்ம வயது பெண்ணைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாற்றாந்தந்தைக்கு 10 ஆண்டுச் சிறை

கர்ப்பமான பதின்மவயது பெண்ணைப் பராமரிப்பதற்காக வீட்டிற்கு அழைத்து வந்து, பிரசவத்திற்குப் பிறகு அவரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பெண்ணின் மாற்றாந்தந்தைக்கு வெள்ளிக்கிழமை ( ஜனவரி 26ஆம் தேதி) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இக்குற்றத்தை அவர், 2020ஆம் ஆண்டுப் புரிந்ததாகவும் முன்னதாக, தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.

தன் தாத்தா - பாட்டியுடன் வசித்து வந்த அப்பெண் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது தாய், மாற்றாந்தந்தை, மாற்றாந்தந்தையின் பிள்ளைகள் இருக்கும் வீட்டிற்குக் குடியேறினார்.

அப்போது அப்பெண் கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்குப் பெண் குழந்தைப் பிறந்தது.

அப்பெண்ணின் தாயார், மாற்றாந்தந்தையின் பிள்ளைகள் ஆகியோர் உறங்கிய பிறகு குற்றவாளி அப்பெண்ணைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் இது குறித்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உறவினர் ஒருவருக்குத் தகவல் தெரிவித்தார். அவரின் அறிவுரைப்படி அந்த வீட்டை விட்டு வெளியேறி அப்பெண் மீண்டும் தன் தாத்தா-பாட்டி வீட்டிற்குச் சென்றார்.

தன் பிள்ளைக்கும் தனக்கும் நிதி உதவி பெற குடும்பச் சேவை நிலையத்தை அப்பெண் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடினார். அப்போது, அங்கிருந்த தொண்டூழியர் ஒருவரிடம் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி அப்பெண் எடுத்துரைத்தார்.

அந்தத் தொண்டூழியர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைதுசெய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!