டெங்கித் தொற்று 53% அதிகரிப்பு; ஒருவர் மரணம்

சிங்கப்பூரில் ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடையே டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 53 விழுக்காடு கூடியிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 3,055 டெங்கி சம்பவங்கள் பதிவாகின.

இதே காலகட்டத்தில் டெங்கி காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தார். இதனால் 2023ஆம் ஆண்டில் டெங்கியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) தெரிவித்தது.

2023ஆம் ஆண்டில் நவம்பர் 4ஆம் தேதி வரை 8,437 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, 2022ல் ஆண்டு முழுமைக்கும் பதிவான 32,325 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காகும்.

செப்டம்பரில் 67.9 விழுக்காடு டெங்கி பாதிப்புக்கு டென்வி-2 வகைக் கிருமி காரணம் என்பதை அக்டோபர் 31ஆம் தேதி தேசிய சுற்றுப்புற அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஆனால் ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் டென்வி-1 வகைக் கிருமி ஆதிக்கம் செலுத்தியது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2013ல் டென்வி-1 வகைக் கிருமியால் டெங்கி பாதிப்பு அதிகரித்தபோது 22,170 பேர் பாதிக்கப்பட்டனர்.

மாறாக, டென்வி-3 வகைக் கிருமி 2022ஆம் ஆண்டில் டெங்கி பாதிப்பை அதிகரிக்கச் செய்தது. 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் டெங்கி அதிகரிப்புக்கு இந்த வகைக் கிருமியே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

நான்கு வகைக் கிருமிகளில் டென்வி-1, டென்வி-2 வகைக் கிருமி இங்கு பொதுவாக காணப்படுகிறது என்று வாரியம் குறிப்பிட்டது.

2016ஆம் ஆண்டிலிருந்து பெரும்பாலான டெங்கி சம்பவங்கள் டென்வி-2 வகைக் கிருமியால் ஏற்பட்டுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய டெங்கி நிபுணரான டிக்கி பாங், டெங்கி சம்பவங்கள் அதிகரித்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றார்.

எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக மழையும் அதிகரித்தது, அதிக வெப்பநிலையும் நீடித்தது.

இந்தச் சாதகமான சூழ்நிலையால் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்தது என்று திரு டிக்கி பாங் கூறினார்.

எல் நினோ காரணமாக வரும் மாதங்களில் வெப்பமான பருவநிலை நிலவும் என்பதால் டெங்கி நிலைமை மேலும் மோசமாகலாம் என்று கடந்த அக்டோபரில் அமைப்பு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் டென்வி-2 வகை கிருமி மீண்டும் தலை தூக்கியதால் பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் வருகைப் பேராசிரியருமான பாங் தெரிவித்தார்.

அப்போதைக்கு அப்போது வேறுபட்ட கிருமி வகைகள் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம் என்றார் அவர்.

இவ்வாண்டின் கடைசியிலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் டெங்கி பாதிப்பு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

2023 ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடையே 290 டெங்கி கொசு பெருகும் இடங்களை வாரியம் அடையாளம் கண்டது. இது, இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிட்டால் 36 விழுக்காடு அதிகம். இவற்றில் 291 கொசுப்பெருக்க இடங்கள் மூடப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!