‘பசுமை வட்டாரத்துக்கும் பங்காளித்துவத்தை வளர்ப்பதற்கும் $6.6 பி. நிதியை சிங்கப்பூர் வழங்கும்’

வட்டாரத்தில் பசுமைப்படுத்துதலை மேம்படுத்துவதற்கும் அனைத்துலக பங்காளித்துவத்தை உருவாக்குவதற்கும் ஆன முயற்சியை சிங்கப்பூர் முன்னெடுத்துச் செல்லவிருக்கிறது. அதற்காக US$5 பில்லியன் (S$6.6 பில்லியன்) நிதியை சிங்கப்பூர் வழங்கும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்தார்.

உலக பருவநிலை செயல் உச்சநிலைக் கூட்டத்தில் சிங்கப்பூரின் தேசிய அறிக்கையை பிரதமர் லீ சியன் லூங்கின் சார்பில் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிட்டார் திரு டியோ. ஐக்கிய நாடுகளின் காப்28 பருவநிலை மாநாடு துபாயில் நடைபெறுகிறது.

புவிசார் அரசியல், பொருளியல் ஆகியவற்றின் நிலையற்ற சூழ்நிலையில், பருவநிலை இலக்குகளை அடைய உலக நாடுகள் அதிக சவால்களை எதிர்நோக்கும் என்று குறிப்பிட்ட திரு டியோ, வரும் 2100ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்புக்குள் கொண்டு வருவதற்குப் பதிலாக, அது 2.1 டிகிரி செல்சியசிலிருந்து 2.8 டிகிரி செல்சியஸ் வரை நோக்கிச் செல்கிறது என்றார்.

“உலக வெப்பமயமாதல் இலக்கை அடைய வேண்டுமானால், வெப்ப தணிப்பு, தழுவல், செயல்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிய அனைத்து நாடுகளும் தங்கள் பங்குக்கு கணிசமான, அனைத்தையும் உள்ளடக்கிய, சமநிலையான விளைவுகளை காப்28 மாநாட்டில் வெளிக்கொணர வேண்டும்.

“இந்த முக்கியமான தருணத்தில், முன்னெப்போதைக் காட்டிலும் நாடுகளுக்கிடையே வலுவான பலதரப்பு ஒத்துழைப்பு இருக்க வேண்டும். சிங்கப்பூரைப் பொறுத்தவரை, உள்ளூர் பருவநிலை செயல்பாடு, வட்டார பங்காளித்துவம், உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றுக்குத் தனது உறுதியான கடப்பாட்டை வெளிப்படுத்தும்,” என்றும் மூத்த அமைச்சர் விவரித்தார்.

“உள்ளூர் செயல்பாட்டை எடுத்துக்கொண்டால், சிங்கப்பூர் ஏற்கெனவே தனது பருவநிலை தொடர்பான லட்சியத்தை அறிவித்து விட்டது.

“அதன்படி வரும் 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்யம் விழுக்காடு கரிம வெளிப்பாட்டை அடைதல், 2030ஆம் ஆண்டுக்குள் 60 மில்லியன் டன் கரியமில வாயுவுக்குச் சமமான கரிம வெளிப்பாட்டைக் குறைத்தல் ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டுள்ளது.

“இதற்கு முன்னதாக, 2030ஆம் ஆண்டுக்குள் 65 மில்லியன் டன் கரியமில வாயுவுக்குச் சமமான கரிம வெளிப்பாட்டைக் குறைத்தலும் 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்யம் விழுக்காடு கரிம வெளிப்பாட்டுக்குக் குறைத்தலும் முன்னைய இலக்குகளாக இருந்தன.

“இலக்குகளை அடைய எடுக்கப்படும் நடவடிக்கைகளில், தற்போதுள்ள ஒரு டன்னுக்கான $5 கரிம வரி, 2024ஆம் ஆண்டு முதல் ஒரு டன்னுக்கு $25 ஆக உயர்த்தப்படும். பின்னர் அது படிப்படியாக 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டன்னுக்கு $50 முதல் $80 வரை உயர்த்தப்படும்,” என்று தெரிவித்த திரு டியோ, இது ஆசியாவிலேயே மிகப் பெரிய நடவடிக்கை என்றும் சொன்னார்.

டிசம்பர் 1ஆம் 2ஆம் தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் உச்சநிலைக் கூட்டத்தில் 140 நாடுகளின் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்குத் தங்கள் நாடுகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டனர்.

புதிய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி முதலீடுகள், புதிய நிதியளிப்பு வாக்குறுதிகள், பருவநிலை செயல்பாட்டுக்கான வேகத்தை உருவாக்குதல் முதலியவை அவற்றுள் அடங்கும்.

“பருவநிலை மாற்றத்தால் விளையும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் பல்வேறு நாடுகளுடன் அதன் தொடர்பான உடன்பாடுகளிலும் கையெழுத்திடும். மேலும் பல நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

“இந்த தலைமுறையின் நெருக்கடியான பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, அவையும் மிக வேகமாக மறைந்துவிடும் அச்சம் உள்ளது.

“ஆகவே, நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, சரியான வழிமுறைகளைக் கையாண்டு, முக்கியமான முடிவுகளை எடுத்து, உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்புக்குள் கொண்டுவர பாடுபட வேண்டும்,” என்று மூத்த அமைச்சர் டியோ தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!