இண்டர்போல்: சுகாதாரப் பராமரிப்புத்துறையைக் குறிவைக்கும் தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல்

தீங்கிழைக்கும் மென்பொருள் தொடர்பான தாக்குதல் இப்போது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகி விட்டது. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தங்கள் இலக்கை இப்போது சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பின் பக்கம் திருப்பியுள்ளனர் என்று இணைய தாக்குதல் கருத்தரங்கில் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 7) நடைபெற்ற ஐஎஸ்சி செக்கியூர் ஆசிய பசிபிக் கருத்தரங்கில் பேசிய இண்டர்போல் அமைப்பின் இணையக் குற்ற வேவுப் பிரிவின் தலைவர் திரு இவோ பெய்ஸின்ஹோ, நிபுணத்துவ சேவைகள், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, கட்டுமானம் போன்ற பணம் புழங்கும் துறைகளைக் குறிவைத்து தீங்கிழைக்கும் மென்பொருள் தொடர்பான தாக்குதல் நடத்தப்படுகின்றன என்றார்.

“புதிய தாக்குதல் உத்தியில் நாங்கள் சுகாதாரப் பராமரிப்பைப் பார்த்தோம். முக்கிய அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான தாக்குதல் பாணியில் ஒரு மாற்றத்தை நாங்கள் கண்டோம். சுகாதாரப் பராமரிப்பை இலக்காகக் கொண்ட தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல்களை உலகம் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். அது அடிக்கடி நடக்கும் சாத்தியமும் அதிகமாக இருக்கும்,” என்றும் திரு பெய்ஸின்ஹோ விவரித்தார்.

இணைய தாக்குதலில் குற்றவாளிகள் தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி ஓர் அமைப்பின் இணைய கட்டமைப்பை மறைத்து பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்கள். அப்படி நிகழும்போது, சம்பந்தப்பட்ட அமைப்பே தனது இணைய கட்டமைப்புக்குள் சென்று தேவைப்படும் கோப்புகளைப் பார்க்க முடியாது. அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் அதே கதிதான். அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட குற்றவாளிகளுக்கு அந்த அமைப்பு அதிகமான தொகையைக் கொடுக்க வேண்டும்.

தமது உரையில் திரு பெய்ஸின்ஹோ, 2020ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையின் இணைய கட்டமைப்பின் தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல் நிகழ்ந்த சமயத்தில், உடனடி சிகிச்சை தேவைப்பட்ட ஒரு பெண் நோயாளியின் முக்கியமான மருத்துவ கோப்பை மருத்துவர்கள் தேடும்போது, அது இணைய தாக்குதல் காரணமாகக் கிடைக்கவில்லை. அதனால் அந்தப் பெண் மாண்டுபோனார் என்று திரு பெய்ஸின்ஹோ தெரிவித்தார்.

“தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதலால் நிகழக்கூடிய கடும் பாதிப்புகளை நாம் பார்க்கத் தொடங்கியுள்ளோம். நிறுவனங்களின் வேலை பாதிப்படையக்கூடிய சாதாரண இணைய தாக்குதல் இதுவல்ல,” என்று கூறிய திரு பெய்ஸின்ஹோ, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பணக்கார நாடுகளில்தான் அதிகமான தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல்கள் நிகழ்கின்றன என்றார்.

இதற்கு சிங்கப்பூரும் விதிவிலக்கல்ல. அண்மையில் நவம்பர் 1ஆம் தேதியன்று, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு மருத்துவமனைகளில் உள்ள இணைய சேவைகள் ஒருங்கிணைந்த முறையில் முடக்கப்பட்டன.

கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் நீடித்த இச்சம்பவத்தால், பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் இணையத் தளங்களில் இடையூறு ஏற்பட்டது.

நல்லவேளையாக, இந்த இணைய தாக்குதலால் பொதுச் சுகாதாரப் பராமரிப்பின் தரவுக்கும் உள்கட்டமைப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று புலனாய்வுகள் பின்னர் தெரிவித்தன.

2010ல் மின்னிலக்க நாணயத்தின் தலையெடுப்பு, இணைய தாக்குதல் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பில் அதிக சிரமத்தை ஏற்படுத்தியது என்று திரு பெய்ஸின்ஹோ தமது உரையில் கூறினார்.

“இணைய ஊடுருவிகள் மின்னிலக்க நாணயத்தைப் பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனையை மிக வேகமாக மாற்றிவிடுகின்றனர். மின்னிலக்க நாணயத்தை வழங்கும் பல நிறுவனங்கள் மின்னிலக்க நாணயத்தின் பரிவர்த்தனையைக் கண்காணிக்க பயிற்சி எடுத்துள்ளன. இருப்பினும், அது மிகவும் சிரமம். மேலும் தீங்கிழைக்கும் மென்பொருள் இப்போது அதிக ஒருங்கிணைப்புடன் செயல்படத் தொடங்கிவிட்டது.

“இப்போது அது சேவையாக மாறிவிட்டது. இணைய தாக்குதல் குற்றவாளிகள் மக்களை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் மூலம் மற்றவர்களிடமிருந்து சுயவிவரங்கள் பெறுதல், பிணைத் தொகை பேச்சுவார்த்தை, பணத்தை வெளியேற்றுதல் போன்றவற்றைச் செய்யச் சொல்கிறார்கள்.

“ஆக, இது பணத்தைத் திருடும் ஒரு சாதாரண கும்பலைப் பற்றியதல்ல. இப்போது தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல் ஒரு நிபுணத்துவ வர்த்தகமாக மாறியுள்ளது,” என்று கூறிய திரு பெய்ஸின்ஹோ, அது பற்றி அனைவரும் எப்போதும் கூடுதல் விழிப்புநிலையில் இருப்பது அவசியம் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!